இலங்கை ஜனாதிபதித் தேர்தல்

விசாரணைகளில் இருந்து இராணுவத்தைக் காப்பாற்றவுள்ளதாகக் கூறுகிறார் கோட்டாபய ராஜபக்ச

வெளிநாட்டுச் செய்தியாளர்கள் முன்னிலையில் மாறுபட்ட கருத்தும், மக்கள் முன்னிலையில் வேறு கதையும்
பதிப்பு: 2019 ஒக். 21 20:29
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: ஒக். 22 20:47
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#PresPollSL
#LKA
#gotabayarajapaksa
ஆட்சி அமைத்தவுடன் அரசியல் பழிவாங்கல்களுக்கு உள்ளாகி இருக்கும் இராணுவ அதிகாரிகளுக்கும் இராணுவப் புலனாய்வு அதிகாரிகளுக்கும் நீதியைக் கொடுக்கவுள்ளதாக இலங்கை ஒற்றையாட்சி அரசின் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடவுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனக் கட்சியின் வேட்பாளர் கோட்டபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். அரசியல் தேவைகளுக்காகவும் சர்வதேச நிறுவனங்களின் அழுத்தங்களினாலும் இலங்கை இராணுவத்தினரை மைத்திரி- ரணில் அரசாங்கம் காட்டிக்கொடுத்துள்ளதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார். இலங்கையின் தேசிய பாதுகாப்புத் திட்டங்களை அமுல்படுத்தவுள்ளதாகவும் கோட்டாபய ராஜபக்ச கூறியுள்ளார். அம்பாந்தோட்டை பெலியத்த பிரதேசத்தில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கோட்டாபய ராஜபக்ச இவ்வாறு கூறினார்.
 
பொதுஜனப் பெரமுனக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் இலங்கையின் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ச சென்ற 14 ஆம் திகதி கொழும்பில் தனது முதலாவது தேர்தல் பிரச்சாரத்தை ஆரம்பித்திருந்தார்.

இதன்போது இறுதிப்போரில் சரணடைந்த முன்னாள் போராளிகள், தமிழ் இளைஞர்கள் யுவதிகளுக்கு என்ன நடந்தது என்று வெளிநாட்டுச் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியிருந்தனர்.

இதற்கு பதிலளித்திருந்த கோட்டாபய ராஜபக்ச, மஹிந்த ராஜபக்சவோ அல்லது அப்போதைய பாதுகாப்புச் செயலாளராக கடமையாற்றிய தானோ போரை வழி நடத்தவில்லை என்றும், மாறாக முன்னாள் இராணுவத் தளபதியே (அவர் யார் என்று பெயர் குறிப்பிடவில்லை) போரை வழிநடத்தியதாகவும் கூறி அந்த கேள்வியிலிருந்து நழுவிச் சென்றிருந்தார்.

ஆனால் பெலியத்தைப் பிரதேசத்தில் இன்று இடம்பெற்ற கூட்டத்தில் இறுதிப் போரைத் தானே வழிநடத்தியதாகக் கூறியுள்ளார். இருவரத்திற்குள் இவ்வாறு இரண்டு விதமான கருத்துக்களை கோட்டாபய ராஜபக்ச கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.