வடமாகாணம் முல்லைத்தீவு

மாங்குளம் வைத்தியசாலை வளாகத்தில் மனித எச்சங்கள், துப்பாக்கி ரவைகள் மீட்பு

நீதிமன்ற உத்தரவுடன் அகழ்வுப் பணி தொடர்கிறது
பதிப்பு: 2020 பெப். 14 10:59
புலம்: முல்லைத்தீவு, ஈழம்
புதுப்பிப்பு: பெப். 15 03:51
main photo main photo main photo main photo main photo main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lka
#tamil
#genocide
தமிழர் தாயகம் வடமாகாணம் முல்லைத்தீவு மாங்குளம் வைத்தியசாலை வளாகத்தில் மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில் நேற்று வியாழக்கிழமையும் மேலதிக அகழ்வுப் பணிகள் இடம்பெற்றன. முல்லைத்தீவு நீதிமன்ற உத்தரவுக்கு அமைவாகவே அகழ்வுப் பணி தொடர்ந்து முன்னெடுக்கப்படுகின்றது. வைத்தியசாலை வளாகத்தில் புதிய கட்டடம் ஒன்றை நிர்மாணிப்பதற்கான துப்பரவுப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோதே மனித எச்சங்கள் புதன்கிழமை கண்டுபிடிக்கப்பட்டிருந்தன. உடனடியாக மாங்குளம் பொலிசாருக்கு அறிவிக்கப்பட்டுச் சம்பவ இடத்திற்கு முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி எஸ் லெனின்குமார் வருகை தந்து பார்வையிட்டிருந்தார். இந்த நிலையில் இன்று வெள்ளிக்கிழமையும் அகழ்வுப் பணிகள் தொடர்கின்றன.
 
மாங்குளம் வைத்தியசாலை வளாகத்தில் அபாயகரமான வெடிபொருட்கள் இருப்பதாகச் சந்தேகிக்கப்பட்டுக் கண்ணிவெடி அகற்றும் நிறுவனம் ஒன்றினால் கண்ணிவெடி அகற்றும் பணி முன்னெடுக்கப்பட்டுகின்றது. இந்த நிலையிலேயே மனித எச்சங்கள் கண்டுபிடிக்கபட்டு இலங்கைப் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டிருந்தது.

முல்லைத்தீவு நீதிபதி எஸ் .லெனின்குமார் குறித்த இடத்தை நேற்று முந்தினம் பார்வையிட்டு அந்த பிரதேசத்தை சட்ட வைத்திய அதிகாரி முன்னிலையில் அகழ்வு செய்யுமாறு உத்தரவிட்டிருந்தார்.

அதனடிப்படையில், கிளிநொச்சி பொது வைத்தியசாலைச் சட்ட வைத்திய அதிகாரி தனுசன் தலைமையில் பொலிஸார், தடயவியல் பொலிஸார், மனிதாபிமான கண்ணிவெடி அகற்றும் நிறுவனத்தினரின் ஒத்துழைப்புடன் அகழ்வுப் பணிகள் இடம்பெறுகின்றன.

அகழ்வின் போது மனித எச்சங்கள், துப்பாக்கி ரவைகள் சில, ஆடைகள் என்பன மீட்கப்பட்டுள்ளன. மீட்கப்பட்ட தடைய பொருட்கள் சட்ட வைத்தியப் பரிசோதனைக்காக அனுப்பிவைக்கப்படவுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்