இலங்கை ஒற்றையாட்சி அரசின் நிலைப்பாடு- 30/1, 34/1, 40/1

தீர்மானங்கள் இலங்கை அரசியல் யாப்புக்கு முரண்- ஜெனீவாவில் தினேஸ் குணவர்த்தன அறிவிப்பு

இணை அனுசரனையில் இருந்தும் வெளியேறுவதாகக் கூறியுள்ளார்
பதிப்பு: 2020 பெப். 26 23:05
புலம்: கிளிநொச்சி, ஈழம்
புதுப்பிப்பு: பெப். 26 23:22
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lka
#tamil
#genocide
ஐக்கிய நாடுகள் சபையின் ஜெனீவா மனித உரிமைச் சபை 2015, 2019ஆம் ஆண்டுகளில் ரணில் மைத்திரி அரசாங்கத்தின் இணை அனுசரணையுடன் நிறைவேற்றப்பட்ட 30/1, 34/1, 40/1 ஆகிய தீர்மானங்களில் இருந்து விலகுவதாக இலங்கை அரசாங்கம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. ஜெனீவா மனித உரிமைச் சபையில் இன்று புதன்கிழமை உரையாற்றிய வெளியுறவு அமைச்சர் தினேஸ் குணவர்த்தன புதிதாகப் பதவியேற்றுள்ள அரசாங்கத்தின் நிலைப்பாட்டை பகிரங்கமாக அறிவித்தார். விலகவுள்ளதாகப் பிரதமர் மகிந்த ராஜபக்ச கொழும்பில் ஏற்கனவே கூறியிருந்த நிலையில் இன்று அமைச்சர் தினேஸ் குணவர்த்தன ஜெனீவாவில் உறுதிப்படுத்தியுள்ளார்.
 
மைத்திரி- ரணில் அரசாங்கம் அனைத்து ஜனநாயக நடைமுறைகளையும் மீறியுள்ளது. 30/1 தீர்மானத்திற்கு அப்போதைய அமைச்சரவையின் அங்கிகாரம் பெறப்பட்வில்லை. இலங்கை நாடாளுமன்றத்திலும் அந்தத் தீர்மானம் சமர்ப்பிக்கப்படவில்லை, அது அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஒப்புதலும் அந்தத் தீர்மானத்துக்குக் கிடைக்கவில்லை எனவும் அமைச்சர் தினேஸ் குணவர்த்தன தனது உரையில் கூறியுள்ளார்.

30/1 தீர்மானம் இலங்கை அரசியல் யாப்பில் உள்ளடக்க முடியாதவை. அத்துடன் இலங்கை மக்களின் இறைமையை மீறுவதாகவும் அமைந்துள்ளதென அமைச்சர் தினேஸ் குணவர்த்தன கூறினார்.

மனித உரிமை மீறல்கள், மனிதாபிமானச் சட்டங்களை மீறிய குற்றச்சாட்டுகள் தொடர்பாக ஆராய்வதற்கு, உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையிலான விசாரணை ஆணைக்குழுவை அமைப்பத்து விசாரணை நடத்தியதாகவும் தினேஸ் குணவர்த்தன கூறியுள்ளார்.

இது குறித்து மேலும் விசாரணைகள் செய்யப்படுமெனவும் புதிய அரசாங்கத்தின் கொள்கையை கருத்திற்கொண்டு கடந்த காலத்தின் சில பரிந்துரைகளை அமுல்படுத்த நடவடிக்கை எடுப்பதற்கும் அந்த விசாரணைக் ஆணைக்குழு சில விடயங்களை முன்மொழியுமெனவும் தினேஸ் குணவர்த்தன தெரிவித்தார்.