இலங்கை ஒற்றையாட்சி அரசின்

நாடாளுமன்றத் தேர்தல் மூன்று மாதங்களுக்கு ஒத்திவைப்பு

கோட்டாபய ராஜபக்ச ஆலோசனை- ரணில், சஜித் ஆகியோருடனும் உரையாடல்
பதிப்பு: 2020 மார்ச் 25 23:58
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: மார்ச் 26 19:26
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lka
#gotabayarajapaksa
இலங்கை நாடாளுமன்றத் தேர்தல் மூன்று மாதங்களுக்குப் பிற்போடப்படலாம் என ஜனாதிபதி செயலகத் தகவல்கள் கூறுகின்றன. ஜனாதிபதி கோட்டாய ராஜபக்ச தலைமையில் இடம்பெற்ற அமைச்சர்கள், அதிகாரிகளுடனான சந்திப்பில் இவ்வாறு கலந்துரையாடப்பட்டாகக் கூறப்படுகின்றது. கொரேனா வைரஸ் தாக்கம் மேலும் அதிகரிப்பதைக் கட்டுப்படுத்தும் நோக்கில் இலங்கைத் தீவு முழுவதிலும் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்குச் சட்டம் மற்றும் அதனால் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகள் பென்ற பல்வேறு பிரச்சினைகள் காரணமாக தற்போதைக்குத் தேர்தலை நடத்த முடியாதென கோட்டாபய ராஜபக்ச கூறியதாக உள்ளகத் தகவல்கள் கூறுகின்றன.
 
தேர்தலை மேலும் மூன்று மாதங்கள் பிற்போடுவது தொடர்பாக ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோருடனும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பேசவுள்ளதாகவும் உள்ளகத் தகவல்கள் கூறுகின்றன.

இலங்கைச் சுயாதீனத் தேர்தல் ஆணையாளர் மகிந்த தேசப் பிரிய தேர்தலை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 25 ஆம் திகதி நடத்த முடியாதென்றும் மே மாதம் 14 ஆம் திகதிக்குப் பின்னரே தேர்தலை நடத்துவதற்கான திகதியை அறிவிக்க முடியும் எனவும் கூறியிருந்தார்.

இந்த நிலையில் மேலும் மூன்று மாதங்கள் தேர்தலைப் பிற்போடுவது தொடர்பாக அரசாங்கம் முடிவெடுத்தாலும் அது பற்றி இலங்கைச் சுயாதீனத் தேர்தல்கள் ஆணைக்குழுவே இறுதி முடிவெடுக்க வேண்டும் என்று கூறப்படுகின்றது.