இலங்கையில்

கொரோனா வைரஸ் தொற்றியவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

யாழ்ப்பாணம், கிளிநொச்சியில் பட்டினியால் பலர் தவிப்பு- சுத்தம் செய்யும் பணியில் இராணுவம்
பதிப்பு: 2020 மார்ச் 30 22:11
புலம்: யாழ்ப்பாணம், ஈழம்
புதுப்பிப்பு: மார்ச் 30 22:36
main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lka
#coronavirus
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றிற்குள்ளான நபர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துச் செல்;கிறது. இன்று தி்ங்கட்கிழமை இரவு மேலும் ஐந்துபேர் தொற்றுக்குள்ளானதாக இனங்காணப்பட்டுள்ளனர். ஏற்கனவே 117 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியிருந்தனர். தற்போது 122 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் தொற்றுக்குள்ளானவர்கள் கொழும்பு, சிலாபம் ஆகிய வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கொழும்பு ஐ.டி.எச் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வரும் ஐந்து பேரின் நிலை ஆபத்தாகவுள்ளதாக வைத்தியசாலைத் தகவல்கள் கூறுகின்றன. மேலும் தொற்றுக்குள்ளான பலர் மறைந்திருப்பதாக இலங்கைப் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
 
கொழும்பு, கம்பஹா ஆகிய மாவட்டங்களில் சில வீடுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. புத்தளம் மாவட்டத்தில் இரண்டு பிரதேசங்களும் கன்டியில் ஒரு பிரதேசமும் சுற்றிவளைக்கப்பட்டு மூடப்பட்டுள்ளன. இந்தப் பிரதேசங்களில் சிலருக்கு வைரஸ் தொற்றியுள்ளாதால் இரு பிரதேசங்களிலும் வசிப்பபோர் வெளியே செல்ல முடியாதென்றும் உள்ளே யாரும் போக முடியாதென்றும் ஏலவே அறிவிக்கப்பட்டிருந்தது.

அதேவேளை, கடந்த மார்ச் மாதம் 16 ஆம் திகதி முதல் வெளிநாடுகளிலிருந்து இலங்கைக்கு வந்தவர்கள் தம்மை பதிவு செய்துக்கொள்ளுமாறு இலங்கைப் பொலிஸார் ஏற்கனவே அறிவித்திருந்தனர். ஆனால் பலர் பதிவு செய்யாமல் மறைந்திருப்பதாகப் பொலிஸார் கூறுகின்றனர்.

அவர்களுக்கு எதிர்வரும் ஏப்ரல் 1 ஆம் திகதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அதற்கு முன்னர் பதிவு செய்யாவிட்டால் அவர்களை கைது செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனப் பொலிஸார் அறிவித்துள்ளனர்.

அதேவேளை, யாழ்ப்பாணம், கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களில் பலர் உணவுப் பொருட்கள் கிடைக்காமல் பட்டினியை எதிர்நோக்கியுள்ளதாக பிரதேச உறுப்பினர்கள் கூறுகின்றனர்.

அன்றாடம் உழைப்பவர்கள், விவசாயிகள், வர்த்தக நிலையங்களில் பணிபுரிவோர் எனப் பலர் பெரும் நிதி நெருக்கடிகளை எதிர்நோக்கியிருப்பதாக யாழ்ப்பாணத்தில் இருந்து வெளியாகும் காலைக்கதிர் பத்திரிகையின் முன் பக்கத்தில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

இலங்கை அரசாங்கத்தின் விசேட உதவித் திட்டங்கள் எதவுமே வடக்குக் கிழக்குத் தாயகப் பிரதேசங்களுக்குக் கிடைக்கவில்லை என்று பிரதேச சபை உறுப்பினர்கள் குற்றம் சுமத்தியுள்ளளனர்.

தாயகப் பிரதேசங்களில் சுத்தம் செய்யும் பணிகளில் இலங்கை இராணுவம், இலங்கை விசேட அதிடிப்படையினரே அதிகளவில் ஈடுபடுத்தப்படுவதாக மக்கள் கூறுகின்றனர்.