ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன

அரசாங்கத்துக்குள் முரண்பாடுகள் நாளுக்கு நாள் அதிகரிப்பு

மகிந்தவுடன் இடம்பெறும் சந்திப்புகளும் தோல்வியெனத் தெரிவிப்பு
பதிப்பு: 2021 மே 08 22:38
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: மே 09 00:18
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lka
#gotabayarajapaksa
ஸ்ரீலங்காப் பொதுஜனப் பெரமுன அரசாங்கத்துக்குள் ஏற்பட்டுள்ள முரண்பாடுகள் மேலும் நீடித்துச் செல்லுகின்றன. கொவிட்-19 நோய்ப்பரவல் காரணமாக கட்சியின் முக்கியமான கூட்டங்களை நடத்த முடியாத நிலையிலும் முரண்பாடுகள் தொடர்பாக பிரதமர் மகிந்த ராஜபக்சவுடன் கொழும்பில் தனித்தனியாகப் பேச்சுக்கள் நடப்பதாகக் கட்சித் தகவல்கள் கூறுகின்றன. குறிப்பாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, தேசிய சுதந்திரமுன்னணி ஆகியவற்றின் மூத்த உறுப்பினர்கள் மற்றும் பேராசிரியர் திஸ்ஸவிதாரன, வாசுதேவ நாணயக்கார ஆகியோருடன் மகிந்த ராஜபக்ச கலந்துரையாடி வருவதாகவும் ஆனாலும் இணக்கம் ஏற்படவில்லை எனவும் கூறப்படுகின்றது.
 
தமது கட்சித் தலைவர் மைத்திரிபால சிறிசேன மீது ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையில் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் நிராகரிக்கப்பட வேண்டுமென ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வாதிட்டு வருகின்றது.

அதேவேளை முக்கிய அமைச்சுப் பொறுப்புகள் வழங்கப்பட வேண்டுமெனவும் ஸ்ரீலங்கா சுத்திரக் கட்சி கேட்டுள்ளது. ஆனால் பசில் ராஜபக்சவின் தலையீடுகள் தொடர்பாக விமல் வீரவன்ச உள்ளிட்ட வேறு உறுப்பினர்கள் குற்றச்சாட்டுக்களை முன்வைத்ததாகவும் கட்சித் தகவல்கள் கூறுகின்றன.

விரைவில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுடன் முன்னணியின் முக்கியமான பங்காளிக் கட்சிகள் சந்தித்து உரையாடவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.