இலங்கை ஒற்றையாட்சி அரசின்

நாடாளுமன்றத்தில் ஆர்ப்பாட்டம்- விவசாயிகளுக்கு உரம் வழங்குமாறு உறுப்பினர்கள் வலிறுத்தல்

தமிழ்த்தேசியக் கட்சிகளும் பங்கேற்பு
பதிப்பு: 2021 ஒக். 22 21:53
புலம்: மட்டக்களப்பு, ஈழம்
புதுப்பிப்பு: ஒக். 22 22:13
main photo main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lk
#government
விவசாயிகளுக்கு உரம் வழங்குமாறு கோரி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தி, தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மற்றும் ஜே.வி.பி உள்ளிட்ட கட்சிகளின் உறுப்பினர்கள் பங்குபற்றியிருந்தனர். இன்று காலை சபாநாயகர் மகிந்த யாப்பா அபயவர்த்தன தலைமையில் முற்பகல் 10 மணிக்கு நாடாளுமன்றம் கூடியதும், வாய்மூல கேள்வி நேரம் இடம்பெற்றது. அதன் பின்னர் சுலோக அட்டைகளைக் கைகளில் ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட உறுப்பினர்கள் விவசாயகளுக்கு உரம் வழங்க வேண்டுமெனக் கோசம் எழுப்பினர்.
 
விவசாயிகளுக்கு அழிவு, நாடு அழிவுப் பாதையில் என எழுதப்பட்ட சுலோக அட்டைகளைக் கைகளில் ஏந்தியவாறு அரசாங்கத்துக்கு எதிராகக் கோசம் எழுப்பினர்

உர இறக்குமதிக்கு அரசாங்கம் விதித்துள்ள தடையை நீக்குமாறும் பாதிக்கப்பட்ட விவசாயகளுக்கு மானியம் வழங்க வேண்டுமெனவும் வற்புறுத்தினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தினால் சபையின் வழமையான அமர்வுகள் செயலிழந்தன. அரசதரப்பு உறுப்பினர்களுடன் வாய்த்தர்க்கமும் ஏற்பட்டது. சபையில் அமைதி காக்குமாறு சபாநாயகர் கேட்டுக் கொண்டபோதும். சுமார் ஒரு மணி நேரத்துக்கும் அதிமாக ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.