2009 ஆம் ஆண்டு மே மாதத்தின் பின்னரான பூகோள அரசியலுக்குள் இலங்கை-

கொழும்புத்துறைமுக அபிவிருத்தி- இந்தியா, ஜப்பான் ஒப்பந்தம்

இந்தியத் தேசியப் புலனாய்வுப் பிரிவின் தலைமை அதிகாரி கொழும்புக்கு வருகை
பதிப்பு: 2019 மே 29 22:34
புதுப்பிப்பு: மே 31 01:35
main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
ஈழத் தமிழர்களின் ஆயுதப் போராட்டம் இல்லாதொழிக்கப்பட்ட 2009 ஆம் ஆண்டு மே மாதத்திற்குப் பின்னரான சூழலில், பூகோள அரசியல் தந்திரோபாயங்களுக்குள் சிக்குண்டுள்ள இலங்கை அரசாங்கம் பத்து ஆண்டுகளில் இலங்கைத் துறைமுகங்களையும் கடற் பிரதேசங்களையும் அமெரிக்கா போன்ற மேற்குலக நாடுகளுக்கு தாரைவார்க்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. முல்லைத்தீவுக் கடற்பரப்பில் இருந்து திருகோணமலைக் கடற்பிரதேசம் வரையான பகுதி எண்ணெய் வயல் ஆய்வுக்காக அமெரிக்க நிறுவனம் ஒன்றிடம் கையளிக்கப்பட்டுள்ளது. சென்ற ஆண்டு மே மாதம் 30 ஆம் திகதி அதற்கான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு செப்ரெம்பர் மாதம் இரண்டாம் திகதி எண்ணெய் வயல் ஆய்வு ஆரம்பிக்கப்பட்டது.
 
ஐந்து ஆண்டுகாலத் திட்டமாக இந்த ஆய்வு இடம்பெற்று வரும் நிலையில், கொழும்புத் தெற்கு துறைமுகத்தின் கிழக்கு முனைய அபிவிருத்தி தொடர்பாக இலங்கை, ஜப்பான், இந்தியா ஆகிய நாடுகளுடன் ஒப்பந்தம் நேற்றுச் செவ்வாய்க்கிழமை கொழும்பில் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

இலங்கை அரசாங்கம் இந்தியா, ஜப்பான் ஆகிய நாடுகளுடன் செய்துள்ள இந்தக் கூட்டு உறவு ஒப்பந்தத்தில், 51 வீத உரிமை கொழும்புத் துறைமுக அதிகார சபைக்குரியதென உயர் அதிகாரியொருவர் தெரிவித்தார்.

இந்தக் கூட்டுறவு ஒப்பந்தத்தின் பிரகாரம் மூன்று நாடுகளும் கொழும்புத் துறைமுக அபிவிருத்தி தொடர்பாக ஆராயலாமெனவும் தேவையான விடயங்களை பகிர்ந்துகொள்ள முடியுமெனவும் கூறப்பட்டுள்ளது.

கொழும்புத் துறைமுகத்தின் கிழக்கு முனையத்தில் பாரிய கொள்கலன் செயற்பாடுகளை விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் அதற்குரிய முறையில் அபிவிருத்திகள் இடம்பெறுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, இலங்கையில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்கள் தொடர்பான விசாணைகளுக்கு மேலதிகமான ஒத்துழைப்புகளை வழங்குவதற்கு இந்தியத் தேசியப் புலனாய்வுப் பிரிவின் தலைமைப் பொலிஸ் அதிகாரி அலோக் மிட்டல் கொழும்புக்கு வருகை தந்துள்ளார்.

அவருடன் இந்தியப் புலனாய்வுப் பிரிவின் உயர் அதிகாரிகள் சிலரும் வருகை தந்துள்ளதாக இலங்கைப் பொலிஸ் திணைக்களத் தகவல்கள் கூறுகின்றன.

அலோக் மிட்டல், தென்னிந்தியாவில் ஐ .எஸ் இஸ்லாமியவாதிகள் தொடர்பான விசாரணைகளை நடத்தியதுடன், தாக்குதல்களையும் தடுத்தும் நிறுத்தியவர்.

இவர் தலைமையிலான குழுவினர் இலங்கையில் விசாரணை நடத்தி இந்திய இலங்கை அரசுகளுக்குத் தகவல்களை பரிமாறவுள்ளதாக இலங்கைப் பொலிஸ் திணைக்களத் தகவல்கள் தெரிவிக்கின்றன.