இலங்கையில் நடத்தப்பட்ட உயிர்த்த ஞாயிறு தாக்குதல்

இந்தோ பசுபிக் பிராந்தியத்தில் பயங்கரவாதமாம் - மோடி

நிதி வழங்கும் நாடுகளைத் தனிமைப்படுத்த வேண்டுமென்றும் சொல்கிறார்
பதிப்பு: 2019 ஜூன் 14 20:13
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: ஜூன் 15 09:59
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#India
#Primeminister
#Narendramodi
#Eastersundayattack
#lka
#srilanka
அப்பாவி உயிர்களைப் பழிவாங்கிய பயங்கரவாதத்தின் கோரமுகத்தை தனது இலங்கை விஜயத்தின் போது பார்த்தததாக, கிர்கிஸ்தான் தலைநகர் கிஸ்கெக் நகரில் இடம்பெற்ற ஷங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாட்டில் இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்துள்ளார். பயங்கரவாதத்தின் ஆபத்தைத் தடுக்க அனைத்து மனிதநேய சக்திகளும் ஒன்றாக முன்வர வேண்டும் எனவும் அவர் இதன்போது அழைப்பு விடுத்துள்ளார். பயங்கரவாதிகளுக்கு நிதி ஆதரவு ஊக்கமளிக்கும் நாட்டைத் தனிமைப்படுத்த வேண்டும் எனவும் இந்தப் போரில் அனைத்து நாடுகளும் ஒத்துழைப்பை அதிகப்படுத்தி இந்தப் பிராந்தியத்தில் பயங்கரவாதத்தை அகற்றுவதை உறுதிசெய்ய வேண்டும் என்றும் மோடி வலியுறுத்தியுள்ளார்.
 
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கடந்த 9 ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டதுடன் கடந்த 21 ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தினத்தன்று பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்ட கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்துக்கு நேரடியாக விஜயம் செய்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து ஷங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாடு கிர்கிஸ்தான் தலைநகர் பிஸ்கெக் நகரில் நேற்று வியாழக்கிழமை ஆரம்பமாகி இரண்டு நாட்கள் இடம்பெற்றது. இந்த மாநாட்டின் போது இலங்கையில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலின் கொடூரம் குறித்து இந்தியப் பிரதமர் உரையாற்றினார்.

ஷங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் நிரந்தர உறுப்பினராக இந்தியா இணைந்துள்ளது. இதன் செயற்பாட்டில் இந்தியா தனது செயற்பாட்டை உறுதிசெய்துள்ளது.

கல்வியும் கலாசாரமும் நமது சமூகத்திற்கு ஒரு நேர்மறையான செயற்பாடுகளைக் கொடுத்தது. இளைஞர்கள் இடையே பிரிவினையை பரப்புவதை நிறுத்த வேண்டும். இலங்கை சென்ற போது புனித அந்தோனியார் தேவாலயத்தில் பல அப்பாவிகளின் உயிர்களைப் பறித்த பயங்கரவாதத்தின் கோரமுகத்தைப் பார்த்தேன்.

பயங்கரவாதத்தின் ஆபத்தைத் தடுக்க அனைத்து மனிதநேய சக்திகளும் கூட்டாக ஒன்றிணைய வேண்டும். பயங்கரவாதிகளுக்கு ஆதரவு நிதி ஊக்கமளிக்கும் நாட்டை தனிமைப்படுத்த வேண்டும். இந்தப் போரில் அனைத்து நாடுகளும் ஒத்துழைப்பை அதிகப்படுத்த வேண்டும். இந்தப் பிராந்தியத்தில் பயங்கரவாதத்தை அகற்றுவதை உறுதிசெய்ய வேண்டும் என நரேந்திர மோடி இதன்போது வலியுறுத்தியுள்ளார்.