உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர்

யாழ்ப்பாணம் - மணியந்தோட்டம் வேளாங்கன்னி மாதா சொரூபம் உடைத்து வீதியில் வீசப்பட்டுள்ளது

மதங்களுக்கிடையே முரண்பாடுகளை ஏற்படுத்தும் நோக்கமா என மக்கள் சந்தேகம்
பதிப்பு: 2019 ஜூன் 17 11:13
புலம்: யாழ்ப்பாணம், ஈழம்
புதுப்பிப்பு: ஜூன் 18 01:00
main photo main photo main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#Jaffna
#velankannimathastatue
#Eastersundayattack
#lka
#Srilanka
இலங்கையில் மதத்தின் பெயரால் அநீதிகள் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தினத்தன்று தலைநகர் கொழும்பு உட்பட கிழக்கு மாகாணத்திலும் கிறிஸ்தவ மக்களை இலக்கு வைத்து பயங்கரத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ள நிலையில், யாழ்ப்பாணம் - மணியந்தோட்டம், வேளாங்கன்னி மாதா சொரூபம் அடையாளந் தெரியாதவர்களால் உடைத்து வீதியில் வீசப்பட்டுள்ளது. இந்த சம்பவம் இன்று திங்கட்கிழமை அதிகாலை இடம்பெற்றுள்ளதாக பிரதேச மக்கள் கூர்மைச் செய்தித்தளத்திற்குத் தெரிவித்தார்.
 
இன்று அதிகாலை தொழிலுக்குச் சென்ற மீனவர்கள் மாதா சொரூபம் உடைக்கப்பட்டுள்ளமை தொடர்பாக பொலிஸாருக்கு தகவல் வழங்கியதை அடுத்து, சம்பவ இடத்துக்கு வந்த பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக பிரதேச மக்கள் கூர்மை செய்தித் தளத்திற்கு குறிப்பிட்டனர்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் தற்போது சுமூகநிலைக்குத் திரும்பியுள்ள நிலையில், மீண்டும் மதங்களுக்கிடையே முரண்பாடுகளை ஏற்படுத்தும் நோக்கில் இந்தச் சம்பவம் மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என பிரதேச மக்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

பல தடவைகள் வேளாங்கன்னி மாதா சொரூபம் அடையாளந் தெரியாத நபர்களால் உடைத்து சேதமாக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ள மக்கள், இந்த சிலை உடைப்பு சம்பவங்களைக் கண்டிப்பதுடன், இந்த சம்பவத்துடன் தொடர்புடையவர்களை அடையாளங்கண்டு அவர்களுக்கு உரிய தண்டனை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.