இலங்கையின் தென்மாகாணம் - காலி அக்மீமனப் பிரதேசத்தில் உள்ள

பாடசாலைக்கு முன்பாகத் துப்பாக்கிப் பிரயோகம் - ஒருவர் பலி

இலங்கைப் பொலிஸார் காரணம் கூறவில்லை - இராணுவச் சிப்பாய் கைது
பதிப்பு: 2019 ஜூலை 04 15:55
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: ஜூலை 05 10:35
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#Gunfire
#Galle
#Death
#Srilankamilitary
#School
#Akmeemana
#lka
#Eastersundayattack
இலங்கையில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலின் பின்னர் இலங்கையில் அனைத்துப் பாடசாலைகளுக்கு முன்பாகவும் இலங்கை இராணுவம் குவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், இலங்கையின் தென் மாகாணம் - காலி மாவட்டம் அக்மீமனப் பிரதேசத்தில் உள்ள உபானந்த வித்தியாலயத்தின் முன்பாகக் கடமையில் இருந்த இராணுவச் சிப்பாய் ஒருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் முப்பத்தொன்பது வயதுடைய நான்கு பிள்ளைகளின் தந்தையொருவர் உயிரிழந்துள்ளார். இன்று வியாழக்கிழமை காலை துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. கடமையில் ஈடுபட்டிருந்த இராணுவச் சிப்பாயின் துப்பாக்கியை பலாத்காரமாகப் பறிக்க முற்பட்டபோதே துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாக, சம்பவம் இடம்பெற்றவுடன் இலங்கைக் காவல்துறையினர் கூறியிருந்தனர்.
 
ஆனால் குறித்த பாடசாலையில் இருந்து அழைப்புக் கிடைத்ததாகவும் அதனாலேயே பாடாசாலைக்குச் சென்றதாகவும் உறவினர்கள் கூறுகின்றனர்.

அதேவேளை, குறித்த நபர் கடமையில் ஈடுபட்டிருந்த இராணுவத்தின் உத்தரவை மீறி பாடசாலை வளாகத்திற்குள் செல்ல முற்பட்டதாகவும் இதனாலேயே அவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாகவும் சம்பவத்தை நேரில் கண்ட சிலர் கூறுகின்றனர்.

இந்தச் சம்பவம் குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கை காவல் துறை ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார். துப்பாக்கிப் பிரயோகம் நடத்திய இராணுவச் சிப்பாய் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். ஆனால் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டமைக்கான காரணங்களை ருவான் குணசேகர கூறவில்லை.

துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த நபர் எந்தப் பிரதேசத்தைச் சேர்ந்தவரெனவும் தெரிவிக்கப்படவில்லை. எனினும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக காலி காவல்துறையினர் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவத்தை அடுத்து அக்மீமனப் பிரதேசத்தில் பதற்றம் நிலவியது. இலங்கை காவல்துறையினரும் குவிக்கப்பட்டிருந்தனர். ஆனாலும் பிரதேசத்தில் உள்ள பாடசாலைகள் வழமை போன்று இயங்கியதாக பிரதேச மக்கள் கூறுகின்றனர்.