முல்லைத்தீவு

செஞ்சோலைப் படுகொலை நினைவுத்தூபியில் பெயர்கள், புகைப்படங்கள் பொறிப்பதற்குத் தடை

நினைவேந்தலைத் தடுப்பதற்கான திட்டமிட்ட சதியென விழா ஏற்பாட்டுக்குழு விசனம்
பதிப்பு: 2019 ஓகஸ்ட் 12 19:44
புலம்: முல்லைத்தீவு, ஈழம்
புதுப்பிப்பு: ஓகஸ்ட் 14 23:34
main photo main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#Sencholaimassacre
#TamilGenocide
#Puthukkudiyiruppu
#mullaituvu
#srilanka
#lka
மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் செஞ்சோலை வளாகத்தின் மீது வான்குண்டுத் தாக்குதல் நடத்திக் கொல்லப்பட்ட அப்பாவி மாணவிகளின் நினைவாக அமைக்கப்படவுள்ள நினைவுத்தூபியில் படுகொலை செய்யப்பட்ட மாணவிகளின் புகைப்படங்களையோ அல்லது அவர்களின் பெயர்களையோ பொறிக்க முடியாதென இலங்கைப் பொலிஸார் தடை விதித்துள்ளனர். இது தொடர்பாக முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பொலிசார் ஏற்பாட்டாளர்களுக்கு எச்சரிக்கையும் விடுத்துள்ளனர். செஞ்சோலைப் படுகொலையின் பதின்மூன்றாவது ஆண்டு நினைவேந்தல் நாளை மறுதினம் புதன்கிழமை அனுட்டிக்கப்படவுள்ள நிலையில், படுகொலை செய்யப்பட்ட மாணவிகளின் நினைவாக புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் அனுமதியுடன் நினைவுத்தூபி ஒன்று அமைக்கப்பட்டு வருகின்றது.
 
இந்நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை சம்பவ இடத்துக்குச் சென்ற இலங்கைப் பொலிஸார் கட்டுமானப் பணியில் ஈடுபட்டோரை உடனடியாகப் புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்திற்கு வருமாறு உத்தரவிட்டிருந்தனர்.

இதனையடுத்து பொலிஸ் நிலையத்துக்குச் சென்ற நினைவேந்தல் நிகழ்வு ஏற்பாட்டாளர்களிடம், நினைவுத்தூபி அமைக்கும் பணிக்கான பிரதேச சபையின் ஒரு வருட அனுமதிக்காலம் கடந்த யூலை மாதம் 31 ஆம் திகதியுடன் முடிவடைந்துள்ள நிலையில், கட்டடப் பணிகளை முன்னெடுக்க வேண்டாம் என்றும் பிரதேச சபையின் அனுமதியுடன் கட்டடப் பணிகளை முன்னெடுக்குமாறும் தெரிவித்துள்ளனர்.

நினைவுத்தூபியில் உயிரிழந்தவர்களின் படங்களையோ அல்லது பெயரையோ பொறிக்க முடியாது என்றும் பொலிசார் எச்சரிக்கை செய்துள்ளனர்.

முல்லைத்தீவு உள்ளிட்ட தமிழர் தாயகப் பகுதிகளில் இலங்கைப் படையினரால் அமைக்கப்படும் நினைவுத்தூபிகள் பிரதேச சபையின் அனுமதியுடனா அமைக்கப்படுகின்றது எனக் கேள்வி எழுப்பியுள்ள விழா ஏற்பாட்டுக் குழுவினர், செஞ்சோலைப் படுகொலை நினைவேந்தலைக் குழப்பும் நடவடிக்கையே இது என்று கூர்மை செய்தித் தளத்திற்கு கூறியதோடு, இந்தச் சம்பவம் தொடர்பாக தமது விசனத்தையும் வெளியிட்டுள்ளனர்.