இலங்கை ஜனாதிபதித் தேர்தலில்

கோட்டாபய வேட்பாளராக அறிவிக்கப்பட்ட நிலையில் யசூசி அகாசி - மகிந்த ராஜபக்ச சந்திப்பு

அமெரிக்கச் சார்புநிலை ஜப்பான் தூதுவர் அகாசி பலரைச் சந்திக்கத் திட்டம்
பதிப்பு: 2019 ஓகஸ்ட் 19 14:07
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: ஓகஸ்ட் 20 20:17
main photo main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#YasushiAkashi
#PresPollSL
#MahindaRajapaksa
#srilanka
#lka
#tamils
நோர்வேயின் ஏற்பாட்டில் இடம்பெற்ற சமாதானப் பேச்சுவார்த்தைக் காலத்தின்போது இலங்கைக்கான ஜப்பான் நாட்டின் சமாதானத் தூதுவராகக் கடமையாற்றிய யசூசி அகாசி எதிர்க்கட்சித் தலைவர்- முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை இன்று திங்கட்கிழமை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். மகிந்த ராஜபக்ச தலைமையிலான ஸ்ரீலங்காப் பொதுஜனப் பெரமுனக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக இலங்கையின் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ச அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது. அமெரிக்க இராணுவச் செயற்பாட்டுத் தளமான பென்ரகனின் ஆதரவுடன் கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டு வரும் நிலையில், அமெரிக்கச் சார்புநாடான ஜப்பான் மகிந்த ராஜபக்சவைச் சந்தித்து உரையாடியுள்ளது.
 
இலங்கையின் அபிவிருத்திச் செயற்பாடுகள் மற்றும் ஜப்பான் உதவித் திட்டங்கள் குறித்து கலந்துரையாடுவதற்காகக் கொழும்புக்கு வருகை தந்துள்ள யசூசி அகாசி, கொழும்பில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் மகிந்த ராஜபக்சவைச் சந்தித்ததார்.

ஜனாதிபதித் தேர்தல் உள்ளிட்ட பலவேறு விடயங்கள் தொடர்பாக யசூசி அகாசி மகிந்த ராஜபக்சவுடன் உரையாடியதாக எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இலங்கை அரசாங்கத்துக்கும் விடுதலைப் புலிகளுக்குமிடையே இடம்பெற்ற பேச்சுவார்த்தைகள் முறிவடைந்தமைக்கு யசூசி அகாசியின் அமெரிக்க, இந்தியச் சார்புச் செயற்பாடுகளும் பிரதான காரணம் என அப்போது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

இந்த நிலையில் கொழும்புக்கு வருகைதந்துள்ள யசூசி அகாசி, சிங்கள ஆட்சியாளர்கள் பலரைச் சந்தித்து உரையாடவுள்ளார்.

மகிந்த ராஜபக்சவுடனான சந்திப்பில் முன்னாள் அமைச்சர்களான பேராசிரியர் ஜி.எல்.பீாிஸ், ஹெகலிய ரம்புக்வெல ஆகியோரும் கலந்துகொண்டனர். யசூசி அகாசியோடு கொழும்பில் உள்ள ஜப்பான் தூதரக அதிகாரிகள் பங்குபற்றினர்.