இலங்கையுடனான உறவு- யாழ்ப்பாணம்

காங்கேசன்துறைமுக அபிவிருத்தி- இந்தியா 45.7 மில்லியன் டொலர் உதவி

அமைச்சர் சகால ரட்ணாயக்கா புகழாரம்
பதிப்பு: 2019 செப். 02 23:23
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: செப். 04 00:32
main photo main photo main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#Indo
#lanka
#lka
#tamil
இலங்கைத் தீவை நவீனமயப்படுத்துவதே இந்திய மத்திய அரசின் பிரதான நோக்கம் என்று கொழும்பில் உள்ள உயர்ஸ்தானிகர் தரன்ஜித் சிங் தெரிவித்தார். இந்திய சுதந்திரதினத்தை முன்னிட்டு கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார். குறிப்பாகக் கொழும்புத் துறைமுகத்தின் கிழக்கு முனை அபிவிருத்தி, யாழ்ப்பாணம் காங்கேசன்துறை துறைமுகத்தை நவீனமயப்படுத்தல், ருஹூனு பல்கலைக்கழகத்தில் பிரமாண்டமான கேட்போர் கூடமொன்றை அமைத்தல், அம்பாந்தோட்டை உள்ளிட்ட தென் பகுதியில் எழுபது ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவ மற்றும் விவசாயிகளுக்கு விசேட திட்டங்களை நடைமுறைப்படுத்தல் இலங்கைத் தீவு முழுவதும் நவீன போக்குவரத்து வசதிகளை மேம்படுத்துவது போன்ற பணிகளை இந்தியா மேற்கொண்டு வருவதாக அவர் கூறினார்.
 
இலங்கையில் ஏப்ரல் 21 ஆம் திகதி இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலின் பின்னர் இலங்கையின் முன்னேற்றத்தில் இந்தியா பெரும் பங்காற்றியது என்றும் பெருமளவு இந்தியர்கள் கொழும்புக்கு வந்து சென்றதாகவும் உயர்ஸ்தானிகர் தரன்ஜித் சிங் கூறினார்.

ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற இந்த நிகழ்வில் உரையாற்றிய இலங்கை அரசாங்கத்தின் அமைச்சர் சகல ரட்ணாயக்கா, பௌத்த சமயம் இந்தியாவில் இருந்து கிடைத்த மாபெரும் சொத்து என்று கூறினார்.

வடக்குக்- கிழக்கு உள்ளிட்ட பிரதேசங்களில் வீடமைப்புத் திட்டங்கள் இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்படுவதாகவும் அமைச்சர் சாகல ரட்ணாயக்கா கூறினார்.

காங்கேசன்துறை முகத்தின் அபிவிருத்திக்காக இந்திய அரசு 45.7 மில்லியன் அமொிக்க டொலர்களை வழங்கியுள்ளதாகவும் சாகல ரட்ணாயக்கா மேலும் தெரிவித்தார்.

வெளிநாடு ஒன்றுக்கு வழங்கும் அதிகபட்ச நிதியுதவியை இந்தியா இலங்கைக்கே வழங்குவதாகவும் கூறிய அமைச்சர் சாகல ரட்ணாயக்கா, இந்தியா எப்போதுமே இலங்கையுடன் நெருங்கிய இராஜதந்திர உறவை பேணி வருவதாகவும் குறிப்பிட்டார்.