வடமாகாணம்

முல்லைத்தீவு, கிளிநொச்சியில் கடும் வரட்சி- குடிநீருக்குத் தட்டுப்பாடு

இருபது மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனா்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவிப்பு
பதிப்பு: 2019 செப். 03 15:04
புலம்: கிளிநொச்சி, ஈழம்
புதுப்பிப்பு: செப். 09 22:37
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
வடமாகாணம் முல்லைத்தீவு, கிளிநொச்சி மாவட்டங்களில் நிலவும் கடும் வரட்சி ஏற்பட்டுள்ளதாக இலங்கை அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. கிளிநொச்சி மாவட்டத்தின் கோணாவில், அக்கராயன், காஞ்சிபுரம், தட்டுவன்கொட்டி, பூநகரி, கண்டாவளை, ஆகிய பகுதிகளிலேயே கூடுதலாக வரட்சி ஏற்பட்டுள்ளதாகவும் குடிநீருக்குப் பெரும் தட்டுப்பாடு நிலவுவதாகவும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் கூறியுள்ளது. வரட்சியால் ஒன்பதாயிரத்தி 933 குடும்பங்களைச் சேர்ந்த 34,785 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கால் நடைகளும் குடிநீரின்றி தவிப்பதாகவும் அதிகாரிகள் கூறுகின்றனர்.
 
கிளிநொச்சி கண்டாவளை பிரதேசத்தில் அறுநூற்றி 66 குடும்பங்களைச் சேர்ந்த இரண்டாயிரத்து 533 பேரும், கரைச்சியில் நான்காயிரத்து 145 குடும்பங்களைச் சேர்ந்த பதின்நான்காயிரத்து 780 பேரும், பூநகரியில் நான்காயிரத்து 185 குடும்பங்களைச் சேர்ந்த பதின்நான்காயிரத்து 634 பேரும், பளையில் ;ஒன்பதாயிரத்து 37 குடும்பங்களைச் சேர்ந்த இரண்டாயிரத்து 838 பேரும் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் கூறுகின்றது.

முல்லைத்தீவில் பன்னிரண்டாயிரத்து 766 குடும்பங்களைச் சேரந்த நரன்காயிரத்து 93 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேவேளை, தென்பகுதியில் அம்பாந்தோட்டை, காலி, களுத்துறை. மாத்தறை, கம்பஹா ஆகிய மாவட்டங்களிலும் கடும் வரட்சி நிலவுவதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் கூறுகின்றது.

புத்தளம். குருநாகல் மாவட்டங்களிலும் கடும் வெப்பத்தினால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் விவசாயச் செய்கைகள் பாதிக்கப்பட்டுள்ளது என்றும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் கூறியுள்ளது.

இலங்கைத்தீவில் இருபது மாவட்டங்கள் வரட்சியினால் நேரடியாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் கூறியுள்ளது. கடந்த மூன்று மாதங்களாக கடும் வெப்பம் நிலவுகின்றமை குறிப்பிடத்தக்கது.