இலங்கையில் நவம்பர் மாதம் நடைபெறவுள்ளமை

ஜனாதிபதித் தேர்தல் அல்ல- அமெரிக்கச் சீனப் போட்டி, விஜயதாச கூறுகிறார்

இலங்கையை அடிமைத்தீவாக மாற்றுவதே திட்டமாம் என்றும் தெரிவிப்பு
பதிப்பு: 2019 செப். 13 16:34
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: செப். 19 20:51
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#PresPollSL
#LKA
#us
#china
இலங்கையில் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் அமெரிக்கா சீனா ஆகிய இரு நாடுகளுமே போட்டியிடவுள்ளதாக மகிந்த ராஜபக்சவைத் தலைவராகக் கொண்ட ஸ்ரீலங்காப் பொதுஜன பெரமுனக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார். இந்த ஜனாதிபதித் தேர்தல் ஐக்கிய தேசியக் கட்சிக்கும் ஸ்ரீலங்காப் பொதுஜனப் பெரமுனக் கட்சிக்கும் இடையிலான போட்டியாக அமையாது எனவும் அமெரிக்காவும் சீனாவும் இலங்கையில் களம் அமைக்கும் போட்டியாகவே அமையுமெனவும் அவர் கூறியுள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து பிரிந்து மகிந்த ராஜபக்சவின் ஸ்ரீலங்காப் பொதுஜனப் பெரமுனக் கட்சியோடு இணைந்து செயற்பட்டு வரும் விஜேயதாச ராஜபக்ச நேற்று வியாழக்கிழமை கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் இவ்வாறு கூறியுள்ளார்.
 
ஜனாதிபதித் தேர்தலில் முன் நிறுத்தப்படும் வேட்பாளர்களை அடிமைப்படுத்தி அதன் மூலம் இலங்கையைக் கைப்பற்றுவதே அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகளின் பிரதான நோக்கம் என்றும் அதற்காகவே இரு நாடுகளும் ஒன்றுக்கொன்று போட்டியிட்டுக் கங்கணம் கட்டித் திரிவதாகவும் விஜயதாச ராஜபக்ச கூறுகின்றார்.

போட்டியிடவுள்ள ஜனாதிபதி வேட்பாளர்கள் யார் என்பதில் இதுவரை பிரதான அரசியல் கட்சிகள் சரியான முடிவுகளை எடுக்கவில்லை. ஆனால் கொழும்பில் உள்ள அமெரிக்க, சீன நாடுகளின் தூதுவர்கள் இலங்கையில் முன்கூட்டியே ஜனாதிபதித் தேர்தலை ஆரம்பித்துவிட்டனர்.

இந்த இரு நாடுகளின் தலையீட்டின் அளவு என்ன என்பதையும், அதனூடாகப் பெறப்படுகின்ற பிரதிபலனுக்கு உரிமை கொண்டாட முடியும் என்பதையும் அந்த இரு நாடுகளும் நன்கு அறியும்.

அதனூடாக இலங்கையை அடிமைகளின் தீவாக மாற்றியமைக்க முடியும் என்பதையும் அமெரிக்காவும் சீனாவும் அறியும். எனவே இவற்றை அடிப்படையாகக் கொண்டே இந்த இரு நாடுகளும் இலங்கை மீது தலையிடுவதாகவும் விஜயதாச ராஜபக்ச கூறினார்.