இலங்கை ஒற்றையாட்சி் அரசின் ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவுள்ள நிலையிவ்

வவுனியா-மன்னார் வீதியில் இலங்கை இராணுவத்தின் புதிய சோதனைச் சாவடி

வீதியால் செல்லும் பயணிகள் சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர்
பதிப்பு: 2019 ஒக். 01 22:34
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: ஒக். 03 10:56
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#landgrab
#lka
#tamil
#genocide
#humanrights
இலங்கையில் ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் வடக்குக் கிழக்குத் தாயகப் பகுதிகளில் இலங்கை இராணுவம் புதிய சோதனைச் சாவடிகளை அமைத்து வருகின்றது. ஏ-09 வீதியில் உள்ள ஆனையிறவுச் சந்தியில் புதிய சோதனைச் சாவடி ஒன்று கடந்த வாரம் அமைக்கப்பட்ட நிலையில் வவுனியா மன்னார் வீதி பம்பைமடு பகுதியில் இராணுவத்தினரால் சோதனை சாவடி ஒன்று இன்று செவ்வாய்க்கிழமை அமைக்கப்பட்டுள்ளது. இலங்கையில் உயிர்த்த ஞாயிறன்று இடம்பெற்ற குண்டுவெடிப்புத் தாக்குதலையடுத்து குறித்த இடத்தில் சோதனைச் சாவடி அமைக்கப்பட்டுப் பின்னர் அகற்றப்பட்டிருந்த நிலையில், தற்போது மீண்டும் அந்த இடத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
 
அந்தப் பகுதியால் செல்லும் அனைத்துப் பயணிகளும் சோதனைக்கு உட்படுத்தப்படுவதாக பிரதேச மக்கள் கூறுகின்றனர்.

பம்பைமடுப் பிரதேசத்தில் நிலை கொண்டுள்ள இராணுவத்தினரே இந்தச் சோதனைச் சாவடியை அமைத்துள்ளனர். இது தொடர்பாகச் செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் தேசிய பாதுகாப்போடு தொடர்புடைய விடயம் என்பதால் புதிதாக அமைக்கப்பட்டுள்ள சோதனைச் சாவடியைப் படம் எடுக்க முடியாதென்றும் அது பற்றிய செய்திகளை எழுத வேண்டாமெனவும் இராணுவத்தினர் கூறியதாக ஊடகவியலாளர்கள் கூறுகின்றனர்.

இந்தச் சோதனைச் சாவடி அமைக்கப்பட்டதால் பிரதேச மக்கள் பெரும் இன்னல்களை எதிர்நோக்கியுள்ளதாகக் கூறுகின்றனர். அதேவேளை அம்பாறை நாவிதன் வெளிப் பிரதேசத்தில் நேற்றுத் திங்கட்கிழமை புதிய சோதனைச் சாவடி ஒன்று அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.