இலங்கை ஒற்றையாட்சி அரசின் ஜனாதிபதித் தேர்தல்

இலங்கைக் குடியுரிமை விவகாரம்- ரிட் மனுத் தாக்கல் செய்ய ஆலோசனை

சட்டத்தரணிகளோடு நாளை கலந்துரையாடல் என்கிறார் காமினி வியங்கொட
பதிப்பு: 2019 ஒக். 16 15:54
புலம்: யாழ்ப்பாணம், ஈழம்
புதுப்பிப்பு: ஒக். 17 09:15
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#PresPollSL
#LKA
#gotabayarajapaksa
இலங்கை ஒற்றையாட்சி அரசின் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடவுள்ள முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்சவின் இலங்கை குடியுரிமையை சவாலுக்கு உட்படுத்தி மீண்டும் ரிட் மனுத் தாக்கல் (Writ) செய்யப்படவுள்ளதாக சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் செயற்பாட்டாளரான காமினி வியங்கொட கூர்மைச் செய்தித் தளத்திற்குத் தெரிவித்தார். இலங்கை உயர் நீதிமன்றத்தில் ரிட் மனுத் தாக்கல் செய்யப்படவுள்ளது. பல சிவில் அமைப்புகள் தம்மோடு இணைந்து இந்த மனுவைத் தாக்கல் செய்யவுள்ளதாகவும் காமினி வியங்கொட தெரிவித்தார். சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் சார்பாக பேராசிரியர் சந்திரகுப்த தேனுவர, காமினி வியங்கொட ஆகியோர் கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு சென்ற நான்காம் திகதி நிராகரிக்கப்பட்டிருந்தது.
 
இந்த நிலையில் ரிட் மனு ஒன்றைத் தாக்கல் செய்யவுள்ளமை தொடர்பாக மூத்த சட்டத்தரணிகள், மற்றும் வேறு சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள் ஆலோசித்து வருவதாகவும் காமினி வியங்கொட கூர்மைச் செய்தித் தளத்திற்குத் தெரிவித்தார்.

ரிட் மனுவைத் தாக்கல் செய்வது குறித்து நாளை வியாழக்கிழமை சட்டத்தரணிகளோடு கலந்துரையாடல் நடத்தப்படும் என்று தெரிவித்த காமினி வியங்கொட, பெரும்பாலும் எதிர்வரும் வாரமளவில் ரிட் மனுவை தாக்கல் செய்யவுள்ளதாகவும் கூறினார்.

கோட்டாபய ராஜபக்ச இலங்கைக் குடியுரிமையைப் பெற்ற முறை சட்டத்திற்கு அமைவானது என்று நான்காம் திகதி கூறி சென்ற நீதியரசா் யசந்த கோதாகொட தலைமையிலான மூவரடங்கிய நீதியரசர் குழு மனுவை நிராகரித்திருந்தது.

2005 ஆம் ஆண்டு ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் கையொப்பத்துடன் இலங்கைக் குடிவரவு குடியகல்வுத் திணைக்களத்தில் இலங்கைக் குடியரிமையை கோட்டாபய ராஜபக்ச பெற்றுக் கொண்ட முறை சட்டத்திற்கு மாறானது என்று குறித்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.