வடமாகாணம் கிளிநொச்சி போரினால் பாதிக்கப்பட்ட முகமாலையில்

கண்ணிவெடி அகற்ற ஜப்பான் தூதரகம் நிதியுதவி

கிளிநொச்சியி்ல் இன்று உடன்படிக்கை கைச்சாத்து
பதிப்பு: 2019 ஒக். 18 16:36
புலம்: கிளிநொச்சி. ஈழம்
புதுப்பிப்பு: ஒக். 19 00:10
main photo main photo main photo main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#LKA
#tamil
#japan
வடக்குக் கிழக்குப் பகுதியில் 2009 ஆம் ஆண்டு மே மாதத்தின் பின்னரான சூழலில் கண்ணிவெடி அகற்றும் பணிகள் கட்டம் கட்டமாக இடம்பெற்று வருகின்றன. குறிப்பாக போர் நடைபெற்ற வன்னிப் பிரதேசத்தில் கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாகக் கண்ணிவெடி அகற்றும் செயற்பாடுகள் கட்டம் கட்டமாக இடம்பெறுகின்றன. கிளிநொச்சி முகமாலைப் பிரதேசத்தில் கண்ணிவெடி அகற்றும் மனிதநேய பணியில் ஈடுபட்டு வரும் சார்ப் மற்றும் கலோ நிறுவனங்கள் சமீபகாலமாக நிதிநெருக்கடியை எதிர்நோக்கியிருந்தன. இதனால் கண்ணிவெடி அகற்றும் பணிகளும் தாமதமடைந்தன. இந்த நிலையில் கொழும்பில் உள்ள ஜப்பான் தூதரகம் குறித்த இரு நிறுவனங்களுக்கும் நிதி வழங்க முன்வந்துள்ளது.
 
கிளிநொச்சி்ப் பிரதேசத்திற்கு இன்று வெள்ளிக்கிழமை முற்பகல் பயணம் செய்த ஜப்பான் தூதுவர் கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கைகளைப் பார்வையிட்டார். பணியாளர்களையும் சந்தித்து உரையாடினார்.

கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கைகளில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள். மற்றும் தேவையான உதவிகள் குறித்தும் ஜப்பான் தூதுவர் அறிந்துகொண்டார். தூதரக அதிகாரிகளும் சென்றிருந்தனர்.

2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் தடைகள் எதுவுமின்றி கண்ணிவெடி அகற்றும் பணிகளுக்கான நிதியுதவியை வழங்குவதற்கு இணக்கம் தெரிவித்ததுடன் குறித்த இரு நிறுவனங்களின் முகாமையாளர்களுடன் உடன்படிக்கை ஒன்றையும் தூதுவர் கைச்சாத்திட்டார்.