இலங்கைப் படையினரின் ஆயுதக்குழுவினால் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்

நிமல்ராஜன் நினைவேந்தல் நிகழ்வுகள் யாழ்ப்பாணம், மட்டக்களப்பில்

ஊடகவியலாளர்கள், நண்பர்கள் கலந்துகெண்டனர்
பதிப்பு: 2019 ஒக். 19 22:29
புலம்: மட்டக்களப்பு, ஈழம்
புதுப்பிப்பு: ஒக். 20 12:15
main photo main photo main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#landgrab
#lka
#tamil
#journalist
இலங்கை ஒற்றையாட்சி அரசின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவின் ஆட்சிக்காலத்தில் யாழ்ப்பாணத்தில் இலங்கைப் படையினரோடு சேர்ந்து இயங்கும் ஆயுதக் குழு ஒன்றினால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமல்ராஜனின் 19 ஆவது நினைவு தினம் இன்று அனுஷ்டிக்கப்பட்டது. வடமாகாணத்தில் யாழ்ப்பாணம் கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களின் நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்றன. யாழ். ஊடக அமையத்தின் ஏற்பாட்டில் ஊடகவியலாளர் ஆ.சபேஸ்வரன் தலைமையில் இன்று சனிக்கிழமை மாலை இந்நிகழ்வு நடைபெற்றது. இதன்போது, நினைவுத்தூபிக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது. 2000 ஆம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் 19 ஆம் திகதி நிமலராஜன் சுட்டுக்கொல்லப்பட்டார்.
 
அதி உயர் பாதுகாப்பு வலயமாக இருந்த யாழ்ப்பாணம் செயலகத்துக்கு சமீபமாக நிமல்ராஜனின் வீட்டில் வைத்து அவர் சுட்டுக்கொல்லப்பட்டார். நிமலராஜனின் பெற்றோரும் கத்திக்குத்துக்கு இலக்காகி காயமடைந்தனர். வீடும் கைக்குண்டுத் தாக்குதலுக்கு உள்ளானது.

மட்டக்களப்பு
இலங்கைப் படையினரோடு சேர்ந்து இயங்கும் ஆயுதக் குழு ஒன்றினால் யாழ் நகரில் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் ம. நிமல்ராஜனின் 19 ஆவது நினைவேந்தல் ந்கழ்வு மட்டக்களப்புக் காந்திபூங்காவில் உள்ள ஊடகவியலாளர் நினைவுத் தூபிக்கு முன்பாக இன்று சனிக்கிழமை மாலை இடம்பெற்றபோது எடுக்கப்பட்ட படம் இது.
ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுப் படையினர் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த இரவுவேளையில் நிமல்ராஜன் படுகொலை செய்யப்பட்டிருந்தார்.

இன்று வரை உரிய விசாரணைகள் நடத்தப்படாதவொரு சூழலில் 19 ஆவது நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்றன. பெருமளவு ஊடகவியலாளர்கள். நண்பர்கள் ஆகியோரும் நிகழ்வில் கலந்துகொண்டனர்.

மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் ஏற்பாடுசெய்த நிகழ்வு இன்று சனிக்கிழமை மாலை மட்டக்களப்பு காந்திபூங்காவில் உள்ள ஊடகவியலாளர் நினைவுத் தூபியருகே நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் தலைவர் வா.கிருஸ்ணகுமார் தலைமையில் நிகழ்வு நடைபெற்றது. மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் தி.சரவணபவன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான பா.அரியநேத்திரன், பொன்.செல்வராஜா உட்பட பலர் கலந்துகொண்டு வணக்க நிகழ்வுகளில் பங்குபற்றினர்.