இலங்கை ஒற்றையாட்சி அரசின்

இடைக்கால அரசாங்கம்- மகிந்த பிரதமராகிறார்- பதினைந்து பேர் கொண்ட அமைச்சரவையும் நியமனம்

நாளை பதவியேற்று நிகழ்வு
பதிப்பு: 2019 நவ. 20 22:14
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: நவ. 21 00:51
main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#LKA
#gotabayarajapaksa
#mahindarajapaksa
இலங்கை ஒற்றையாட்சி அரசின் ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ச சென்ற திங்கட்கிழமை பதவியேற்றுள்ள நிலையில் தற்காலிகமாக இடைக்கால அரசாங்கம் ஒன்றை அமைக்கவுள்ளார். ரணில் விக்கிரமசிங்க இன்று புதன்கிழமை மாலை பிரதமர் பதவியில் இருந்து விலகவுள்ளதாக அறிவித்துள்ளார். அதிகாரபூர்வமாக நாளை வியாழக்கிழமை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்குப் பதவி விலகல் கடிதம் அனுப்பவுள்ளதாகவும் இன்றிரவு அலரிமாளிகையில் வைத்துக் கூறினார். இந்த நிலையில் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நாடாளுமன்றம் கலைக்கப்படும் வரை இடைக்கால அரசாங்கம் ஒன்றை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அமைக்கவுள்ளார். பிரதமராக தற்போது எதிர்க்கட்சித் தலைவராகவுள்ள முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச நியமிக்கப்படவுள்ளார்.
 
பதினைந்துபேர் கொண்ட புதிய அமைச்சரவை ஒன்றும் அமைக்கப்படவுள்ளது. மகிந்த ராஜபக்ச தலைமையிலான ஸ்ரீலங்காப் பொதுஜனப் பெரமுனக் கட்சிக்கு அரசாங்கம் ஒன்றை அமைக்க நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையில்லை.

ஆனாலும் இடைக்கால அரசாங்கம் ஒன்றை அமைக்க ஐக்கிய தேசியக் கட்சி, ஜே.வி.பி ஆகிய கட்சிகள் இணக்கம் தெரிவித்துள்ளன. தற்போதைய நாடாளுமன்றத்தின் பதவிக்காலம் அடுத்த ஆண்டு ஓகஸ்ட் மாதமே நிறைவடைகின்றது.

ஆனால் 19 ஆவது திருத்தச் சட்டத்தின் பிரகாரம் நாடாளுமன்றத்தைக் கலைக்க வேண்டுமானால் மார்ச் மாதமே கலைக்க முடியும். அதற்கு முன்னர் கலைக்க வேண்டுமானால் நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மைப் பலத்துடன் விசேட பிரேரணை ஒன்று சமர்ப்பிக்கப்பட்டு நிறைவேற்றப்பட வேண்டும்.

எனவேதான் மார்ச் மாதம் வரை நாடாளுமன்றத்தைக் கொண்டு நடத்த இடைக்கால அரசாங்கத்தை அமைக்க இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதமராகப் பதவியேற்க வருமாறு கோட்டாபய ராஜபக்ச மகிந்த ராஜபக்சவுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.