இலங்கை ஒற்றையாட்சி அரசின் ஜனாதிபதி

கோட்டாபய ராஜபக்சவுடன் பிரித்தானியத் தூதுவர் சந்திப்பு- சவூதி இராஜதந்திரியும் உரையாடல்

தூதரக அதிகாரிகளும் பங்கேற்பு
பதிப்பு: 2019 நவ. 25 22:49
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: நவ. 27 23:59
main photo main photo main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lka
#tamil
#genocide
இலங்கைக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் வழங்க பிரித்தானியா தயாராக இருப்பதாக கொழும்பில் உள்ள பிரித்தானியத் தூதுவர் சாரா ஹல்டன் (Sarah Hulton) இலங்கை ஒற்றையாட்சி அரசின் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் தெரிவித்துள்ளார். இன்று திங்கட்கிழமை கொழும்பு காலிமுகத் திடலில் உள்ள ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்து உரையாடியபோது இவ்வாறு கூறியுள்ளார். புதிய ஜனாதிபதிக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்த பிரித்தானியத் தூதுவர் இனங்களிடையே நல்லுறவை ஏற்படுத்த வேண்டிய அவசியம் குறித்தும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் கூறியுள்ளார். இந்தச் சந்திப்பில் பிரதி பிரித்தானிய உயர் ஸ்தானிகர் டொம் பேர்னும் (Tom Burn) கோட்டாபய ராஜபக்சவின் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.
 
கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாகப் பதவியேற்ற நாள் முதல் கொழும்பில் உள்ள வெளிநாட்டுத் தூதுவர்கள் தொடர்ச்சியாகச் சந்தித்து வருகின்றனர். குறிப்பாக அமெரிக்க, இந்திய, சீனா ஆகிய நாடுகளின் தூதுவர்கள் சந்தித்து பிராந்திய அரசியல் நிலைமைகள் குறித்துப் பேசியிருந்தனர்.

இந்த நிலையில் இன்று சந்தித்து உரையாடிய பிரித்தானியத் தூதுவர், வடக்குக் கிழக்கு நிலைமைகள் குறித்தும் உரையாடியதாக உள்ளகத் தகவல்கள் கூறுகின்றன.

இந்தச் சந்திப்புத் தொடர்பாக ஜனாதிபதி செயலகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. ஆனால் என்னென்ன விடயங்கள் பேசப்பட்டது என்ற விபரங்கள் எதுவும் அறிக்கையில் கூறப்படவில்லை.

இதேவேளை இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர் அப்துல் நசர் அல் ஹர்த்தி உள்ளிட்ட தூதுக் குழுவினர் கோட்டாபய ராஜபக்சவை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர். ஜனாதிபதியின் உத்தியோகப்பூர்வ அலுவலகத்தில் இன்று திங்கட்கிழமை பிற்பகல் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.