கிழக்கு மாகாணம் மட்டக்களப்பு

அடை மழையால் வாழைச்சேனை, கோறளைப்பற்று வடக்கு வாகரை வெல்லாவெளி மக்கள் தற்காலிக முகாம்களில் தஞ்சம்

தற்காலிக முகாம்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்
பதிப்பு: 2019 டிச. 04 16:01
புலம்: மட்டக்களப்பு, ஈழம்
புதுப்பிப்பு: டிச. 06 10:40
main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lka
#tamil
#east
கிழக்கு மாகாணம் மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ந்து பெய்கின்ற அடைமழையினால் ஆறு பிரதேசசெயலகங்களில் வசிக்கும் மக்கள் பாதிப்புக்குள்ளாகி இடம்பெயர்ந்து தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மண்முனை வடக்கு பிரதேச பிரிவிலும் காத்தான்குடி பிரதேசப்பிரிவிலும் மண்முனைப்பற்று ஆரையம்பதி பிரதேசப்பிரிவிலும் அதுபோன்று கோறளைப்பற்று தெற்கு கிரான் ,கோறளைப்பற்று வாழைச்சேனை ,கோறளைப்பற்று வடக்கு வாகரை மற்றும் வெல்லாவெளி ஆகிய பிரதேசங்களில் வசிக்கின்ற 1050 குடும்பங்களை சேர்ந்த 3765 பேர் பாதிக்கப்பட்டு தற்காலிக முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அனர்த்த நிலையப்பணிப்பாளர் எ.எம்.எஸ் சியாத் தெரிவித்தார்.
 
கிரான் ,ஆரையம்பதி ஆகிய பிரதேச செயலகப்பிரிவுகளில் 4 வீடுகள் பகுதியளவில் சேதமுற்றுள்ளது. மட்டக்களப்பு- மண்முனைவடக்கு நாவற்குடா பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 25 குடும்பங்களைச் சேர்ந்த 65 பேர் முகாமொன்றில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, சித்தாண்டி- ஈரளக்குளத்திற்கான தரைவழிப் போக்குவரத்து கடந்த ஒரு வாரமாக முற்றாக துண்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மாவட்டத்தில் தொடர்ச்சியாகப் பெய்த மழை காரணமாக ஈரளக்குளம் கிராமத்திற்குள்ளும் தற்போது சுமார் 8 கிலோமீட்டர் வரை ஆற்று நீர் பிரவேசித்துள்ளது.

சந்தனமடு ஆறு பெருக்கெடுத்துள்ளமையால் சித்தாண்டியின் நான்கு கிராம சேவகர் பிரிவில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக சுமார் 15 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. சந்துவெளி ஆறு பெருக்கெடுத்தமையினால், சந்துவெளி கிராமத்திற்குள் சுமார் 800 மீட்டர் தூரத்திற்கு வெள்ள நீர் உட்பிரவேசித்துள்ளது.

இதேவேளை, முறக்கொட்டாஞ்சேனை ஆறு பெருக்கெடுத்தமையினால் 125-இற்கும் மேற்பட்ட மீனவர்கள் ஒரு வாரமாக மீன்பிடித் தொழிலை முன்னெடுக்க முடியாத நிலையிலுள்ளதாக மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.