கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாகப் பதவியேற்ற பின்னர்

ரஷியக் கடற்படையின் உயர்மட்டக் குழு திருகோணமலையில் உரையாடல்

சிரியாவில் இஸ்லாமியத் தீவிரவாதிகளுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகள் குறித்து விளக்கம்
பதிப்பு: 2019 டிச. 06 15:13
புலம்: திருகோணமலை, ஈழம்
புதுப்பிப்பு: டிச. 10 23:44
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lka
#east
#RussianNavy
கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாகப் பதவியேற்ற பின்னர் ரஷிய நாட்டுக் கடற்படையின் உயர்மட்டக்குழு ஒன்று இலங்கைக்கு வருகை தந்துள்ளது. பாதுகாப்புக் கல்லூரியின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் அன்ரோய் இலனிக் உள்ளிட்ட ரஷியப் படைகளின் உயா்மட்டக் குழுவினரே இலங்கைக்கு வருகை தந்தனர். இக் குழுவுக்கு ரஷியக் கடற்படையின் உயர்மட்ட அதிகாரி ரியல் அட்மிரல் அலெக்ஸான்டர் வி. கார்ப்போவ் (Rear Admiral Dr. Alexander V. Karpov) தலைமை தாங்கினார். பாதுகாப்புச் செயலாளர் கமால் குணரட்ன உள்ளிட்ட இலங்கைக் கடற்படைஉயர் அதிகாரிகளை சென்ற முதலாம் திகதி திங்கட்கிழமை சந்தித்த ரஷியக் கடற்படையின் உயர்மட்டக்குழு கிழக்கு மாகாணத்துக்குப் பயணம் செய்திருந்தது.
 
கிழக்குக் கடற்படையின் பிரதான முகாமுக்குச் சென்ற ரஷியக் கடற்படையின் உயர்மட்ட குழு, அங்கு நீண்ட கலந்துரையாடல்களில் ஈடுபட்டது. இலங்கைக் கடற்படைத் தளங்களையும் பார்வையிட்டது.

இலங்கைக் கடற்படையின் கிழக்கு மாகாணக் கட்டளைத் தளபதி ரியல் அட்மிரல் மெரில் விக்கிரமசிங்க தலைமையிலான இலங்கைக் கடற்படைக்குழு ஒன்று இந்தக் கலந்துரையாடலில் பங்குபற்றியது.

இலங்கைக் கடற்படைக்குச் சொந்தமான திருகோணமலையில் உள்ள கடற்படைக் கேட்போர் கூடத்தில் கலந்துரையாடல் இடம்பெற்றது. இலங்கைப் பாதுகாப்புத் துறையைச் சேர்ந்த உயரதிகாரிகள் பலரும் இதில் பங்குபற்றியிருந்தனர்.

சிரியாவில் இஸ்லாமியத் தீவிரவாதிகளுக்கு எதிராக நடத்தப்படும் போர் தொடர்பாக ரஷியக் கடற்படை உயர்மட்டக்குழு இந்தக் கலந்துரையாடலில் விளக்கமளித்தது. இலங்கையிலும் இஸ்லாமியத் தீவிரவாதத் தாக்குதல் இடம்பெறாமல் எவ்வாறு தடுப்பது குறித்தும் ரஷிய- இலங்கைக் கடற்படை உயர் அதிகாரிகள் கலந்துரையாடினர்.

இது ஏற்கனவே திட்டமிடப்பட்ட கலந்துரையாடல் என்று இலங்கைக் கடற்படையின் கிழக்கு மாகாணக் கட்டளைத் தளபதி ரியல் அட்மிரல் மெரில் விக்கிரமசிங்க தெரிவித்திருந்தார்.