கொழும்பில் கடத்தப்பட்டு விடுவிக்கப்பட்ட

சுவிஸ் தூதரகப் பெண் பணியாளரை மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்துமாறு நீதிமன்றம் உத்தரவு

இன்று இரண்டாவது நாளாகவும் இலங்கைக் குற்றப் புலனாய்வுப் பிரிவிடம் வாக்குமூலம்
பதிப்பு: 2019 டிச. 09 14:08
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: டிச. 10 13:01
main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lka
#switzerland
#gotabayarajapaksa
சுவிஸ்லாந்துத் தூதரகப் பெண் பணியாளரிடம் இன்று திங்கட்கிழமை இரண்டாவது நாளாகவும் விசாரணை இடம்பெற்றுள்ளது. நேற்று ஞாயிற்றுக்கிழமை சுமார் ஐந்து மணி நேர விசாரணை நடத்தப்பட்டிருந்தது. இலங்கைக் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நடத்திய விசாரணைகளின்போது கொழும்பில் சுவிஸ்லாந்துத் தூதரக அதிகாரிகளும் சமூகமளித்திருந்தனர். சென்ற 25 ஆம் திகதி தூதரகத்தில் பணியாற்றும் கார்னியர் பானிஸ்டர் பிரான்சிஸ் (Ganier Banister Francis) என்ற பெண் பணியாளரே கடத்தப்பட்டிருந்தார். இலங்கைக் குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கும் இந்தக் கடத்தலுக்கும் தொடர்பில்லையென இலங்கை அரசாங்கம் தொடர்ச்சியாகத் தெரிவித்திருந்த நிலையில் இந்த விசாரணை இடம்பெறுகின்றது.
 
குறித்த பெண் பணியாளர் விசாரணையின்போது கடத்தப்பட்டமை தொடர்பான வாக்குமூலங்களை வழங்கியுள்ளதாகவும் இலங்கைக் குற்றப் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.

அதேவேளை, உடல்நிலை குறித்த மதிப்பீட்டிற்காக கொழும்பு சட்ட மருத்துவ அதிகாரியிடம் குறித்த பெண் பணியாளரைப் பரிசோதனைக்கு உட்படுத்துமாறும் கொழும்பு நீதிமன்றம் பரிந்துரைத்துள்ளது.

அத்துடன் இன்று ஒன்பதாம் திகதிவரை பிறப்பிக்கப்பட்டிருந்த வெளிநாடு செல்வதற்கான பயணத் தடை எதிர்வரும் 12 ஆம் திகதி வரையும் நீதிமன்றத்தால் நீடிக்கப்பட்டுள்ளது. வாக்குமூலம் பெறப்படுவதோடு மருத்துவப் பரிசோதனையும் இன்று இடம்பெறுமென தெரிவிக்கப்படுகின்றது.

சுவிஸ் தூதரகப் பெண் பணியாளர் கொழும்பில் கடத்தப்பட்டமைக்கான ஆதாரங்கள் இல்லையென்றும் அந்தக் கடத்தலுக்கும் அரசாங்கத்துக்கும் தொடர்பு இல்லையெனவும் அமைச்சா் பந்துலா குணவர்த்தன நேற்று ஞாயிற்றுக்கிழமை கொழும்பில் செய்தியாளர்களிடம் கூறியிருந்தாா்.