வடமாகாணம்

யாழ்ப்பாணம் குருநகர் பிரதேசத்தில் விசேட அதிரடிப்படையினர் பொலிஸார் இணைந்து தேடுதல்

தேசிய பாதுகாப்புக் கருதி தேடுதல், சோதனை நடவடிக்கை இடம்பெறுமெனப் பொலிஸார் தகவல்
பதிப்பு: 2020 ஜன. 12 12:07
புலம்: யாழ்ப்பாணம், ஈழம்
புதுப்பிப்பு: ஜன. 15 02:48
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lka
#tamil
வடமாகாணம் யாழ்ப்பாணம் குருநகர் பிரதேசத்தில் இலங்கை விசேட அதிரடிப்படையினர், இலங்கைப் பொலிஸார் இணைந்து சுற்றிவளைப்புத் தேடுதல் சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 5.30 தொடக்கம் ஆறு மணி வரை தேடுதல், சோதனை நடவடிக்கைகள் இடம்பெற்றன. கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாகப் பதவியேற்ற பின்னர் வடக்குக்- கிழக்குப் பிரதேசங்கள் உள்ளிட்ட இலங்கையின் அனைத்துப் பகுதிகளிலும் தேடுதல் சோதனை நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன. இலங்கைத் தேசிய பாதுகாப்பை மையப்படுத்தியே தேடுதல், சோதனை நடவடிக்கைகள் இடம்பெறுவதாக இலங்கைப் பொலிஸ் திணைக்களம் கூறியுள்ளது.
 
இலங்கைப் பொலிஸார், விசேட அதிரடிப்படை, இராணுவம் ஆகிய படைகள் இணைந்து நடத்திய தேடுதல், சோதனை நடவடிக்கைகளில் எவரும் கைது செய்யப்படவில்லை. சந்தேகத்துக்கிடமான ஆயுதங்களோ, பொருட்களோ கைப்பற்றப்படவில்லை என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறான சோதனை நடவடிக்கைகள் அவ்வப்போது தொடருமென யாழ் பொலிஸார் தெரிவித்தனர். இதேவேளை நேற்றுச் சனிக்கிழமை தெல்லிப்பளை;ப் பிரதேசத்தில் இராணுவத்தினரும் பொலிஸாரும் இணைந்து சுற்றிவளைப்பில் ஈடுபட்டனர். ஆனால் எவரும் கைது செய்யப்படவில்லை. சந்தேகத்திற்கிடமான பொருட்கள் எவையும் மீட்கப்படவில்லை பொலிஸார் தெரிவித்தனர்.

கொழும்பு, வெள்ளவத்தை, பம்பலப்பிட்டி. கொள்ளுப்பிட்டி. கொட்டாஞ்சேனை, மட்டக்குழிய உள்ளிட்ட பிரதேசங்களிலும் வாழும் குடியிருப்பாளர்களும் பொலிஸாரால் பதிவு செய்யப்படுகின்றனா்.

இலங்கைப் பொலிஸ் திணைக்களம் வழங்கியுள்ள விசேட விண்ணப்பப்படிவம் ஒன்றில் குடியிருப்பாளர்கள் தமது விபரங்களை எழுதிக் கொடுக்க வேண்டுமென பொலிஸார் கூறியுள்ளனர்.