இந்தோ- பசுபிக் பூகோள அரசியலின் மற்றுமோர் நகர்வு

மகிந்த புதுடில்லி செல்வார்- உடன்படிக்கைகள் குறித்து ஆராய்வார்

பசில் ராஜபக்ச அமெரிக்காவில் இருந்து கொழும்பு திரும்பினார்-
பதிப்பு: 2020 ஜன. 31 22:57
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: ஜன. 31 23:14
main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lka
#indianocean
#region
மகிந்த ராஜபக்ச பிரதமராகப் பதவியேற்று முதன் முறையாக எதிர்வரும் பெப்ரவரி மாதம் ஏழாம் திகதி இந்தியாவுக்குப் பயணம் செய்யவுள்ளதாக கொழும்பில் உள்ள பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. கோட்டாபய ராஜபக்ச சென்ற நவம்பர் மாதம் 19 ஆம் திகதி ஜனாதிபதியாகப் பதவியேற்ற பின்னர் முதலாவது வெளிநாட்டுப் பயணமாக இந்தியாவுக்குச் சென்றிருந்தார். புதுடில்லியில் பிரதமர் நரேந்திரமோடி உள்ளிட்ட பலரைச் சந்தித்திருந்தார். இந்த நிலையில் மகிந்த ராஜபக்சவும் முதலாவது வெளிநாட்டுப் பயணமாக இந்தியாவுக்குச் செல்லவுள்ளார். பொருளாதார உதவிகள் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக மகிந்த ராஜபக்ச இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி, இந்திய வெளியுறவு அமைச்சர் மற்றும் உயர் அதிகாரிகளையும் சந்திக்கவுள்ளார்.
 
இந்தியப் பாதுகாப்பு ஆலோசகர் மற்றும் பாதுகாப்பு உயர்மட்ட அதிகாரிகளையும் மகிந்த ராஜபக்ச சந்திக்கவுள்ளார். மைத்திரி- ரணில் அரசாங்கத்தின் போது வரையபட்ட எட்கா எனப்படும் பொருளாதார உட்னபடிக்கை இதுவரை கைச்சாத்திடப்படவில்லை.

பௌத்த தேரர்கள், அரசியல் கட்சிகளின் கடும் எதிர்ப்பினால் அந்த உடன்படிக்கை கைச்சாத்திடுவது தற்காலிகமாகக் கைவிடப்பட்டிருந்தது. எனினும் அந்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட வேண்டுமென இந்தியா கடும் அழுத்தம் கொடுத்து வருகின்றது.

இலங்கைக்கு இந்தியா வழங்கவுள்ள நாநுரற்றி ஐம்பது மில்லியன் தொடலர் உதவியின் அடிப்படையில் இலங்கைப் பொருளாதாரத்தையும் இலங்கை இராணுவத்தின் தரத்தையும் மேலும் உயர்த்துவது என்ற அடிப்படையில், இலங்கையோடு பொருளாதார உடன்படிக்கைகளைச் செய்ய வேண்டுமென இந்தியா கருதுவதாக கொழும்பில் உள்ள இந்தியச் செய்தியாளர் ஒருவர் கூறினார்.

அதேவேளை, ஸ்ரீலங்காப் பொதுஜன பெரமுனக் கட்சியின் ஸ்தாபகரும் தேசிய அமைப்பாளரும் முன்னாள் அமைச்சருமான பசில் ராஜபக்ச நேற்று வியாழக்கிழமை அமெரிக்காவில் இருந்து கொழும்புக்குத் திரும்பியுள்ளதாக கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சென்ற நவம்பர் மாதம் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தல் முடிவடைந்த பின்னர் அமெரிக்காவுக்குச் சென்றிருந்த பசில் ராஜபக்ச நேற்றிரவு மீண்டும் கொழும்புக்குத் திரும்பியுள்ளார்.

இரட்டைப் பிராஜாவுரிமையை ரத்துச் செய்யும் நோக்கில் அமெரிக்காவுக்குச் சென்றிரந்த பசில் ராஜபக்ச. தனது அமெரிக்கக் குடியுரிமையை ரத்துச் செய்தாரா இல்லையா என்று தெரியவில்லையென அவருக்கு நெருக்கமானவர்கள் கூறுகின்றனர்.

எதிர்வரும் ஏப்பிரல் மாதம் இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் பசில் ராஜபக்ச போட்டியிட வேண்டுமானால் அமெரிக்கக் குடியுரிமை ரத்துச் செய்யப்பட்டிருக்க வேண்டும். 2016 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட 19 ஆவது திருத்தச் சட்டத்தின் பிரகாரம் இரட்டைக் குடியுரிமை பெற்றுள்ளவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களாகப் பதவி வகிக்க முடியாது.