இலங்கை ஒற்றையாட்சி அரசின்

நாடாளுமன்றத் தேர்தல் ஏற்பாடு- சஜித் தலைமையில் புதிய அரசியல் அணி குறித்த பேச்சுக்கள் தீவிரம்

ரணில் தனது கருத்தை இதுவரை வெளியிடவில்லை
பதிப்பு: 2020 பெப். 02 23:14
புலம்: கிளிநொச்சி, ஈழம்
புதுப்பிப்பு: பெப். 07 01:09
main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lka
#sajithpremadasa
நடைபெறவுள்ள இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் சஜித் பிரேமதாச தலைமையிலான புதிய அரசியல் அணி வெற்றிபெறுமென்றும் அதற்குரிய வகையில் புதிய கூட்டணி அமைக்கப்படும் என்றும் பங்காளிக் கட்சிகள் தெரிவித்துள்ளன. கொழும்பிலுள்ள சஜித் பிரேமதாஸவின் வாசஸ்தலத்தில் இன்று நண்பகல் இடம்பெற்ற கூட்டத்தில் புதிய அரசியல் கூட்டணிக்கான இறுதிக்கட்ட பேச்சுக்கள் இடம்பெற்றுள்ளதாகப் பங்காளிக் கட்சிகள் கூறுகின்றன. புதிய கூட்டணி ஒன்றை அமைப்பதற்கு ஐக்கிய தேசியக் கட்சியின் மத்திய குழு கடந்த வாரம் இணக்கம் தெரிவித்திருந்தது. ஆனால் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தனது முடிவை அறிவிக்கவில்லை.
 
ஆனாலும் ஐக்கிய தேசியக் கட்சியின் நூற்றி ஆறு நாடாளுமன்ற உறுப்பினர்களில் அறுபதுக்கும் அதிகமான உறுப்பினர்கள் சஜித் பிரேமதாசவுடன் இணைந்து செயற்பட விருப்பம் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையிலேயே புதிய கூட்டணி அமைப்பதற்கான இறுதிக்கட்ட பேச்சுக்கள் இன்று ஞாயிற்றுக்கிழமை நண்பகல் சஜித் பிரேமதாசவின் கொழும்பில் உள்ள இல்லத்தில் இடம்பெற்றுள்ளன.

ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டாரவை, புதிய அரசியல் கூட்டணியின் பொதுச் செயலாளராக நியமிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது. ஆனாலும் வேறு மூத்த உறுப்பினர்கள் சிலரின் பெயர்களும் பரிந்துரைக்கப்படக் கூடிய வாய்ப்பும் உள்ளது. புதிய அரசியல் கூட்டணிக்குரிய சின்னமும் விரைவில் தீர்மானிக்கப்படவுள்ளது.

தேர்தலில் போட்டியிடுவது குறித்தும் புதிய அரசியல் அணியை உருவாக்குவது தொடர்பாகவும் சஜித் பிரேமதாச பௌத்த மாகாநாயக்கத் தேரர்களையும் கத்தோலிக்க திருச்சபையின் ஆயர்களையும் சந்தித்து விளக்கமளித்தும் வருகின்றார்.