இலங்கைத் தீவில்

இனப்பிரச்சினை இருப்பதாக சஜித் பிரேமதாசவும் பேச மறுக்கிறார்-மாவை சேனாதிராஜா

கோட்டாபய ராஜபக்ச சர்வாதிகாரத்தை நோக்கிச் செல்வதாகவும் கூறுகிறார்
பதிப்பு: 2020 பெப். 21 23:56
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: பெப். 22 00:15
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lka
#tamil
#genocide
ஜனநாயக முறையில் வாக்குகளைப்பெற்று ஜனாதிபதியான கோட்டாபய ராஜபக்ச அந்த ஜனநாயகத்தை அழித்து சர்வாதிகார,பாசிஸ ஆட்சியைக் கொண்டுவரவே நடவடிக்கைகளை எடுப்பதாக இலங்கைத் தமிழரசுக்கட்சியின் தலைவரும் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் யாழ் மாவட்ட உறுப்பினருமான மாவை சேனாதிராஜா குற்றம் சுமத்தினார். அத்துடன் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மட்டுமன்றி எதிர்க்கட்சித்தலைவரும் கூட இலங்கையில் இனப்பிரச்சினை ஒன்றுள்ளதை வேண்டுமென்றே ஏற்க மறுப்பதாகவும் பேச மறுப்பதாகவும் மாவை சேனாதிராஜா இலங்கை நாடாளுமன்றத்தில் கூறினார். நாடாளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸ் மோசடிகள் தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே மாவை சேனாதிராஜா இவ்வாறு கூறினார்.
 
கோட்டாபய ராஜபக்ச 69 இலட்சம் வாக்குகளை பெற்று ஜனாதிபதியானார். ஆனால் அதன் பின்னர் அவர் பகிரங்கமாக தனது கொள்கை விளக்கவுரையில் சிங்கள பௌத்த வாக்குகளாலேயே தான் ஜனாதிபதியானதாகக் கூறினார்.

ஆகவே சிங்களப் பெரும்பான்மைத்துவத ஒற்றையாட்சி என்று கோட்டாபய ராஜபக்ச கூறினார். அவர் தனது பதவி ஏற்பு உரையிலோ அல்லது கொள்கை விளக்கவுரையிலோ இலங்கையில் இனப்பிரச்சினை உள்ளதாகக் கூறவேயில்லை என்றும் மாவை சேனாதிராஜா கூறினார்.

இந்த விவாதத்தில் உரையாற்றிய அரசாங்கம் தரப்பினர் மாத்திலமல்ல எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கூட இந்த இனப்பிரச்சினை ஒன்றுள்ளதைப்பற்றிப்பேச மறு்ப்பதாகவும் மாவை சேனாதிராஜா கூறுகிறார்.

தமிழ் மக்களின் மீள் குடியேற்ற நடவடிக்கைகளை அர்ப்பணிப்புடன் முன்னெடுத்த அரச அதிபரான வேதநாயகனை அவர் ஓய்வு பெறுவதற்கு மூன்று மாதங்கள் உள்ள நிலையில் வலுக்கட்டாயமாக இடமாற்றியது எதற்காக என்றும் மாவை சேனாதிராஜா கேள்வி எழுப்பினார்.

மட்டக்களப்பு அரச அதிபர் உதயகுமாரும் வலுக்கட்டாயமாக இடமாற்றப்பட்டு தற்போது ஓய்வுபெறவுள்ளதாகவும் இது அரசியல் பழிவாங்கல் செயற்பாடு எனவும் மாவை சேனாதிராஜா கூறினார்.