இலங்கை ஒற்றையாட்சி அரசு

தீர்மானத்தில் இருந்து வெளியேறாமால் உள்ளக விசாரணைகளையும் இல்லாமல் செய்யும் புதிய உத்தி

ஜெனீவா கூட்டத் தொடரில் அமைச்சர் தினேஸ் குணவர்த்தன விளக்கமளிப்பார்
பதிப்பு: 2020 பெப். 22 16:41
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: பெப். 22 17:08
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lka
#tamil
#genocide
இலங்கை ஒற்றையாட்சி அரசு ஜெனீவா தீர்மானத்தில் இருந்து விலகுமென பிரதமர் மகிந்த ராஜபக்ச அறிவித்தாலும் அதற்கான மாற்று வழிகள் குறித்து இலங்கை வெளியுறவு அமைச்சின் உயர் அதிகாரிகள் ஆராய்ந்து வருவதாக உள்ளகத் தகவல்கள் கூறுகின்றன. 30/1 தீர்மானத்தின் மூலமே சர்வதேச விசாரணைகள் தடுக்கப்பட்டது என்றும் தமிழ் இனப்படுகொலை எனக் கூறப்படுவதும் தடுக்கப்பட்டதாக இலங்கையின் மூத்த சிங்கள இராஜதந்திரிகள் அரசாங்கத்துக்கு ஆலாசனை வழங்கியுள்ளதாகவும் இதனால் அது குறித்துப் பரிசீலிப்பதாகவும் தெரியவந்துள்ளது. சர்வதேசக் கண்டனங்களைத் தவிர்க்கும் நோக்கிலும் இராஜதந்திரிகள் கூறிய விடயங்கள் பரிசீலிக்கப்படுவதாக உள்ளகத் தகவல்கள் கூறுகின்றன.
 
30/1 தீர்மானத்தின் மூலமே மகிந்த ராஜபக்சவையும் அவரது சகாக்களையும் காப்பாற்றியதாகவும் சர்வதேச விசாரணை, தமிழ் இனப் படுகொலை என்ற விடயங்கள் தடுக்கப்பட்டதாகவும் முன்னாள் வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீர சென்ற வியாழக்கிழமை இலங்கை நாடாளுமன்றத்தில் கூறியிருந்தார்.

இது தொடர்பாகவும் அரசாங்கம் பரிசீலித்து வருவதுடன் உள்ளக விசாரணைகளைக் கூட தடுப்பதற்குரிய ஏற்பாடுகளில் ஈடுபடுவதாகவும் கூறப்படுகின்றது.

எதிர்வரும் செவ்வாய்க்கிழமை 26 ஆம் திகதி புதன்கிழமை ஜெனீவா மனித உரிமைச் சபையில் உரையாற்றுவதற்காக வெளியுறவு அமைச்சர் தினேஸ் குணவர்த்தன ஜெனீவாவுக்கச் செல்லவுள்ளார்.

அதற்கு முன்னதாக இலங்கை அரசாங்கம் தமது நிலைப்பாடு குறித்து முடிவெடுக்கும் எனவும் உள்ளகத் தகவல்கள் கூறுகின்றன.

அனேகமாக அமைச்சர் தினேஸ் குணவர்த்தன ஜெனீவாவில் உரையாற்றும்போது 30/1 தீர்மானத்தில் இருந்து வெளியேறுவது குறித்து நேரடியாகக் கூறமாட்டார் என்றும் மாற்று வழிகள் தொடர்பான சில பரிந்துரைகளை அவர் முன்வைக்கலாமெனவும் கூறப்படுகின்றது.

குறிப்பாக 30/1 தீர்மானத்தில் இருந்து வெளியேறுவதைவிட அந்ததத் தீர்மானத்தில் முக்கியமான பகுதிகளை நிறைவேற்றியுள்ளதாக அமைச்சர் தினேஸ் குணவர்த்தன ஜெனீவாவில் விளக்கமளிக்கவுள்ளார்.

அத்துடன் உள்ளக விசாரணைகளும் அவசியம் இல்லையென்றும் இலங்கை இராணுவம் வடக்குக் கிழக்குப் பகுதிகளில் தற்போது குறைக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் தினேஸ் குணவர்த்தன கூறுவாரெனக் கொழும்பு அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

எனினும் அரசாங்கம் இதுவரை அதிகாரபூர்வமாக எதுவுமே ஊடகங்களுக்குக் கூறவில்லை.