கிளிநொச்சியில் இடம்பெற்ற கூட்டம்

ஜெனீவா தீர்மானங்களை நடைமுறைப்படுத்த ஐக்கிய நாடுகள் சபை வலியுறுத்த வேண்டும்- தமிழரசுக் கட்சி

இலங்கை அரசாங்கத்தின் மீது கண்டனம்
பதிப்பு: 2020 பெப். 23 22:12
புலம்: கிளிநொச்சி, ஈழம்
புதுப்பிப்பு: பெப். 24 13:21
main photo main photo main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lka
#tamil
#genocide
ஜெனீவா மனித உரிமைச் சபையின் 30/1 தீர்மானத்திலிருந்து இலங்கை அரசாங்கம் விலகினாலும், எடு்கப்பட்ட தீர்மானங்களை நடைமுறைப்படுத்த ஐக்கிய நாடுகள் சபை வலியுறுத்த வே்ணடும் என தமிழரசு கட்சியின் மத்திய குழு கூட்டத்தில் ஏகமனதாக தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம் ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே சுமந்திரன் இவ்வாறு தெரிவித்துள்ளார். குறித்த ஊடக சந்திப்பு இன்று பிற்பகல் 6.30க்கு கிளிநொச்சியில் அமைந்துள்ள தமிழரசுக் கட்சி அலுவலகத்தில் இடம்பெற்றது.தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் மத்திய குழு கூட்டம் இன்று கிளிநொச்சி தமழரசு கட்சி அலுவலகத்தி இடம்பெற்றது.
 
ஜெனீவா மனித உரிமைச் சபையின் 30/1 தீர்மானம் தமிழ் இனப்படுகொலை என்பதையும் சர்வதேச விசாரணையும் இல்லாமல் செய்துள்ளதாகவே ஏனைய தமிழக் கட்சிகளும் சிவில் சமூக அமைப்புகளும் குற்றம் சுமத்துகின்றன

குறித்த கூட்டத்தில் ஆராயப்பட்ட விடயங்கள் தொடர்பில் ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,க்கியநாடுகள் மனித உரிமை பேரவை ஆரம்பமாகவுள்ள நிலையில் இலங்கை அரசு ஐ நா தீர்மானங்களிலிருந்து வெளியுறுவது தொடர்பாக அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

இந்த நிலையில் எதிர்வரும் 26ம் திகதி இலங்கைக்கான நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. குறித்த ஒதுக்கப்பட்ட நேரத்தில் இலங்கை அரசாங்கத்தின் சார்பில் செல்லும் தினேஸ் குணவர்த்தன குறித்த தீர்மானங்களிலிருந்து விலகுவதாக அறிவிக்க உள்ளார்.

இலங்கை குறித்த தீர்மானங்களிலிருந்து விலகும் என்பது ஏற்கனவே அறிந்த ஒன்றாகும். ஆட்சி மாற்றத்தின் பின்னர் அவர்களின் செயற்பாடுகள் தொடர்பாக நாம் அவதானித்த வருகின்றோம். இந்த நிலையில் மனித உரிமைகள் பேரவையினால் எடு்கப்பட்ட தீர்மானங்களிலிருந்து இலங்கை வெளியேறும் நிலையில் எவ்வாறான விடயங்களை முன்வைப்பது என்பது தொடர்பில் மத்திய குழு கூட்டத்தில் இன்று முடிவிலை ஏகமனதாக எடுத்திருந்தோம்.

ஜெனீவா மனித உரிமைச் சபையினால் எடுக்கப்பட்ட 30/1 தீர்மானத்தை இலங்கை அரசாங்கம் மீறுகின்றமையை தமிழரசு கட்சி வன்மையாக கண்டிக்கின்றது. அதேவேளை இலங்கை குறித்த தீர்மானங்களைிலிருந்து விலகினாலும், மனித உரிமைகள் பேரவையினால் ஏற்கனவே எடுக்கப்பட்ட தீர்மானங்களை தொடர்ந்தும் நடைமறைப்படுத்த வேண்டும் எனவும், அது தவிர்ந்து வுறு வழிகளையும் கையாள வேண்டும் எனவும் கோருவதான தீர்மானத்தினை இன்று நாம் எடுத்துள்ளோம்.

இன்று திமழரசுக்கட்சியினால் எடுக்கப்பட்ட தீர்மானமாக மாத்திரமல்லாது, பங்காளி கட்சிகளிடமும் குறித்த தீர்மானத்தை தெரியப்படுத்தியதாகவு்ம, அவர்களும் அதனை ஏற்றுள்ளதாகவும் சுமந்திரன் இதன்போது தெரிவித்தார்.

ஆனால் ஜெனீவா மனித உரிமைச் சபையின் 30/1தீர்மானம் தமிழ் இனப்படுகொலை என்பதையும் சர்வதேச விசாரணையும் இல்லாமல் செய்துள்ளதாகவே ஏனைய தமிழக் கட்சிகளும் சிவில் சமூக அமைப்புகளும் குற்றம் சுமத்துகின்றன.