இலங்கைப் படையினரால் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் பற்றிய

நீதி விசாரணையை சர்வதேச நீதிமன்றமே நடத்த வேண்டும்- உறவினர்கள் சங்கம் கூட்டறிக்கை

தமிழரசுக் கட்சியின் தீர்மானம் வெறும் கண்துடைப்பு எனவும் குற்றச்சாட்டு
பதிப்பு: 2020 பெப். 24 13:19
புதுப்பிப்பு: பெப். 25 13:37
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
இலங்கை அரசாங்கம் ஜெனீவா மனித உரிமைச் சபையின் தீர்மானத்தில் இருந்து விலகினாலும் அந்தத் தீர்மானத்தை நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என தமிழரசு கட்சியின் மத்திய குழுவில் எடுக்கப்பட்ட முடிவு வெறுமனே கண்துடைப்பு என்று வடக்குக்- கிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் குற்றம் சாட்டியுள்ளனர். கிளிநொச்சியல் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடாகவியலாளர் சந்திப்பில் அவர்கள் இவ்வாறு தெரிவித்துள்ளனர். குறிதத் ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கரு்தது தெரிவித்த வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் கிளிநொச்சி மாவட்ட இணைப்பாளர் பத்மநாதன் கருணாவதி தமிழரசுக் கட்சியின் தீர்மானத்துக்குக் கண்டனம் தெரிவித்தார்.
 
வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தமது பிள்ளைகளிற்கு நீதி வேண்டி சர்வதேசத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆனால் இலங்கை அரசாங்கம் நீதியைப் பெற்று தரும் என்ற நம்பிக்கையை இழந்து விட்டதாக அவர் தெரிவித்தார்.

கொழும்பை மையமாகக் கொண்டு காணாமல் ஆக்கப்பட்டோரைக் கண்டறியும் அலுவலகம் ஒன்றை அமைத்து அதன் ஊடாக சில உதவிகளை வழங்கித் தமமை் ஏமாற்ற முற்படுவதாக பத்மநாதன் கருணாவதி குற்றம் சுமத்தமினார்.

இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து தமிழ்த் தேசிய கூட்டமைப்பு செயற்பட்டுள்ளது. கூட்டமைப்பு எமக்கு துரோகம் இழைத்துள்ளது. அரசாங்கத்துக்கு கால நீடிப்பினை பெற்றுக்கொடுத்துள்ளது.

அரசாங்கத்துடன் இணைந்து காணாமல் ஆக்கப்பட்டோரைக் கண்டறியும் அலுவலகத்தை திறந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்களை ஏமாற்ற இலஙகை அரசாங்கத்துக்கு வழி சமைத்துக் கொடுத்தது தமிழரசுக் கட்சிதான்.

இவ்வாறான நிலையில் தமிழரசுக் கட்சியை மையப்படுத்திய தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் ஜெனீவா மனித உரிமைகள் பேரவைக்குச் செல்வது வெறுமனே கண் துடைப்பு என்று அவர் கூறினார்.

தமிழரசுக் கட்சியை ஒருபோதும் நம்ப முடியாது. காணாமல் போனவர்களின் உறவினர்களுக்கான நீதியை சர்வதேச சமூகமே பெற்றுத் தர வேண்டும். இலங்கை அரசாங்கத்தையும் நம்ப முடியாது.

ஜெனீவா மனித உரிமைச் சபை அமர்வுக்குச் சென்று விளக்கமளிக்க முற்படுவதாகவும் அவ்வாறு முடியாவிட்டால், எழுத்து மூலமான விளக்கத்தைக் கொடுக்கவுள்ளதாவும் ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் கூறிள்ளார்.

அதேவேளை, காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்காக சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் ஊடாக மாத்திரமே நீதி கிடைக்கும் என வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அமைப்பு கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஜெனீவா மனித உரிமைச் சபையில் அங்கம் வகிக்கும் அனைத்து நாடுகளும் இதனைக் கவனத்தில் எடுக்க வேண்டுமென்றும் ஐக்கிய நாடுகள் சபை அழுத்தம் கொடுக்க வேண்டுமெனவும் அந்தக் கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.