வடமாகாணம் யாழ்ப்பாணம் மிருசுவில் பிரதேசத்தில்

எட்டுத் தமிழர்கள் கொல்லப்பட்ட வழங்கில் மரண தன்டணை விதிக்கப்பட்ட இராணுவச் சிப்பாய்க்குப் பொது மன்னிப்பு

நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னர் நடவடிக்கையெனத் தெரிவிப்பு
பதிப்பு: 2020 மார்ச் 07 20:55
புலம்: யாழ்ப்பாணம், ஈழம்
புதுப்பிப்பு: மார்ச் 10 16:54
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lk
#tamil
வடமாகாணம் யாழ்ப்பாணம்- மிருசுவில் பிரதேசத்தில் எட்டுத் தமிழர்கள் இலங்கைப் படையினரால் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் மரணதண்டனை விதிக்கப்பட்ட இராணுவச் சிப்பாய்க்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பொதுத் தேர்தலுக்கு முன்னதாக பொதுமன்னிப்பளிக்கத் தீர்மானித்துள்ளதாக சிறிலங்காப் பொதுஜன முன்னணித் தகவல்கள் கூறுகின்றன. கடந்த இரு மாதங்களுக்கு முன்னர் குறித்த சிப்பாய் விடுதலை செய்யப்பட்டதாகப் கொழும்பில் பரவலாகப் பேசப்பட்டிருந்தது. ஆனாலும் ஏப்ரல் மாதம் 25 ஆம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னதாகவே விடுதலை செய்யப்படவுள்ளதாக கடந்த 2000 டிசம்பர் 19 அன்று மிருசுவிலில் தமது வீடுகளைப் பார்வையிட சென்ற பொதுமக்கள், இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டுச் சுட்டுக் கொல்லப்பட்டிருந்தனர்.
 
இதன்போது அங்கிருந்து தப்பியோடிச் சென்றிருந்த ஒருவர், வழங்கிய தகவலின்படி நடத்தப்பட்ட விசாரணையில் 14 இராணுவச் சிப்பாய்கள் கைது செய்யப்பட்டு சாவகச்சேரி நீதிமன்றதால் விளக்கமறியலில் வைக்கப்பட்டுப் பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டு வழக்கு விசாரணை இடம்பெற்று வந்தது.

பின்னர் இந்த வழக்கு அனுராதபுரம் மேல் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு, கொழும்பு விசேட மேல் நீதிமன்றத்திடம் பாரப்படுத்தப்பட்டிருந்தது. மூவரடங்கிய நீதிபதிகள் குழு வழக்கை விசாரித்தது. 14 இராணுவச் சிப்பாய்களில் ஐவர் மீது குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

25 ஆம் திகதி ஆணி மாதம் இராணுவச் சிப்பாய் சுனில் ரட்ணாயக்காவுக்கு நீதிபதிகள் மரணதண்டனை விதித்திருந்தனர். போதிய ஆதரங்கள் இல்லையென்பதால் ஏனைய நான்கு சிப்பாய்களும் போதிய ஆதாரமில்லையென்பதால் விடுதலை செய்யப்பட்டனர்.

இந்த நிலையிலேயே சுனில் ரத்னாயக்கவிற்கு, எதிர்வரும் பொதுத்தேர்தலுக்கு முன்னர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பொதுமன்னிப்பளித்து விடுதலை செய்யவுள்ளதாகக் கூறப்படுகின்றது.