வடமாகாணம்

முல்லைத்தீவில் 20 வயது இளைஞனைக் காணவில்லை

பெற்றோர் புதுக்குடியிருப்புப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு
பதிப்பு: 2020 மார்ச் 10 22:43
புலம்: முல்லைத்தீவு, ஈழம்
புதுப்பிப்பு: மார்ச் 10 22:51
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lka
#tamil
வடமாகாணம் முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் உள்ள இருட்டுமடு என்ற கிரமாத்தில் வசித்து வந்த 20 வயதுடைய இளைஞர் ஒருவரைக் காணவில்லையெனப் பெற்றோர் முறையிட்டுள்ளனர். கடந்த நான்கு நாட்களாகக் இந்த இளைஞனைக் காணவில்லையெனப் புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் சென்ற 7 ஆம் திகதி சனிக்கிழமை முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகப் பெற்றோர் கூறுகின்றனர்.இருட்டுமடு உடையார் கட்டுக் கிராமத்தைச் சேர்ந்த 20 வயதுடைய பாக்கியராஜா விஜிதரன் என்ற இளைஞனே கடந்த 05.03.2020 அன்று முதல் காணாமல் போயுள்ளார். வீட்டில் இருந்து வெளியில் சென்று பல மணிநேரமாகியும் இவர் வீடு திரும்பவில்லை என்றும் உறவினர்களின் உதவியுடன் தெரி;ந்த இடங்களில் தேடியதாகவும் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.
 
அதேவேளை, இருபது வயதுடைய இளைஞன் காணாமல் போயுள்ளமை தொடர்பாக இலங்கை மனித உரிமை ஆணை;குழு அலுவலகத்திலும் முறையிடப்பட்டுள்ளது. முல்லைத்தீவில் அதிகளவு இலங்கைப் படையினர் குவிக்கப்பட்டுள்ள நிலையில் இளைஞன் காணாமல் போயுள்ளமை தொடர்பாக உறவினர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

இதேவேளை, இளைஞ்ன் காணாமல் போனமை தொடர்பாக அனைத்துப் பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக முல்லைத்தீவுப் பொலிஸார் கூறுகின்றனர்.

தமது பிள்ளையை யாராவது எங்காவது கண்டால் உடனடியாக அறியத் தருமாறு பெற்றோர் உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளனர்.