கிழக்கு மாகாணம்

மட்டக்களப்பு கம்பஸில் கொரோனா வைரஸ் தடுப்பு முகாம்- முஸ்லிம் மக்கள் எதிர்ப்பு

இன அழிப்பு நடவடிக்கையென்று இலங்கை அரசாங்கத்தின் மீது குற்றச்சாட்டு
பதிப்பு: 2020 மார்ச் 10 23:33
புலம்: மட்டக்களப்பு, ஈழம்
புதுப்பிப்பு: மார்ச் 11 23:35
main photo main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lka
#gotabayarajapaksa
தென் கொரியாவில் இருந்து இல்ங்கைக்குத் திரும்பிய 166 பயணிகளை பராமரிப்பதற்காக மட்டக்களப்பு தனியார் பல்கலைக்கழகத்திற்கு அனுப்பியமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து முஸ்லிம் மக்கள் இன்று செவ்வாய்க்கிழமை கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். பெரும் செலவில் கட்டப்பட்டு;ப் பாவனையின்றி இருக்கும் மட்டக்களப்புப் பல்கலைக்கழகத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு முகாம் ஒன்றை இலங்கை அரசாங்கம் அமைத்துள்ளது. அதனைக் கண்டித்து பிரதேச பாடசாலை மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். வாகரை பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள ரிதிதென்னை இக்ராஹ் வித்தியாலயத்திற்கு மாணவர்கள் செல்ல முடியாத வகையில் வித்தியாலய நுழைவாயிலை மூடி இன்று காலை முதல் போராட்டம் இடம்பெற்றது.
 
அத்தோடு ஜெயந்தியாய அஹமட் ஹிறாஸ் வித்தியாலயத்தி;ற்கு மாணவர்கள் பாடசாலைக்குச் சமூகமளிக்காமை காரணமாக பாடசாலை கல்வி நடவடிக்கை முற்றாக முடங்கின.

ரிதிதென்னை இக்ராஹ் வித்தியாலயம் மற்றும் ஜெயந்தியாய அஹமட் கிறாஸ் வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளுக்கு அதிபர், ஆசிரியர்கள் மாத்திரம் சமூகமளித்திருந்தனர்.

கொரோனா வைரசால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள இத்தாலி, ஈரான் மற்றும் தென்கொரியாவில் இருந்து இலங்கை வரும் பயணிகளை மட்டக்களப்பு தனியார் பல்கலை;க்கழகத்தில் தனிமைப்படுத்தி சோதனைக்கு உட்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதற்காகவே மட்டக்களப்பு தனியார் பல்கலைக்கழகத்தினை கொரோனா மத்திய நிலையமாக மாற்றி அங்கு தங்க வைக்கப்பட்டு தொடர்ந்தும் மருத்துவ கண்காணிப்பிற்கு உட்படுத்தப்படவுள்ளதாக தகவல் வெளியான நிலையில், மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பெரும்பாலான பொதுமக்களால் எதிர்ப்பு நடவடிக்கை இடம்பெற்று வருகின்றது.

இது இலைங்கை அரசாங்கத்தின் இன ரீதியாக அழிக்கும் முயற்சி என்றும் அந்த முயற்சியை உடனடியாக நிறுத்த வேண்டுமெனவும் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் கோசம் எழுப்பினர்.

சவுதியரேபிய நாட்டின் நிதியுதவியில் கட்டி முடிக்கப்பட்ட மட்டக்களப்பு கம்பஸ் எனப்படும் பல்கலைக்கழகச் செயற்பாடுகள் கடந்த ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலின் பின்னர் முஸ்்லிம் மக்களுக்கு எதிராக ஏற்பட்ட கிளர்ச்சிகளையடுத்து நிறுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.