தமிழ் பேசும் தாயகம் கிழக்கு மாகாணம்

மட்டக்களப்பில் கொரோனா வைரஸ் தடுப்பு முகாம் அமைக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு

ஹர்த்தால் அனுஸ்டிப்பு- பாடசாலைகள், அரச அலுவலகங்கள் செயலிழந்துள்ளன
பதிப்பு: 2020 மார்ச் 12 10:59
புலம்: மட்டக்களப்பு, ஈழம்
புதுப்பிப்பு: மார்ச் 12 11:11
main photo main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lka
#tamil
கொரோனா வைரஸ் உலகை ஆக்கிரமித்து வருவதால் வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு வரும் பயணிகளை 14 நாட்கள் தடுத்து வைத்து மருத்துவப் பரிசோதனை நடத்துவதற்காக தமி;ழ் பேசும் மக்களின் தாயகமான மட்டக்களப்பு மாவட்டத்தி;ல் தடுப்பு முகாம்கள் அமைக்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று வியாழக்கிழமை பூரண ஹர்த்தால் அனுஸ்டிக்கப்படுகின்றது. கொரொனா தொற்றிலிருந்து எமது மாவட்டத்தினை பாதுகாப்போம் என்னும் தலைப்பில் நேற்று தமிழ் உணர்வாளர் அமைப்பு விடுத்த வேண்டுகோளின் அடிப்படையில் இவ்வாறு ஹர்த்தால் அனுஸ்டிக்கப்படுகின்றது.
 
மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டால், இந்த மாவட்டம் தனிமைப்படுத்தப்படும் நிலையேற்படும். இந்த அனர்த்ததில் இருந்து தமது மாவட்டத்தைப் பாதுகாக்க தமது எதிர்ப்பை வெளிப்படுத்தியே எதிர்ப்பு வெளியிடுவதாக தமிழ் உணர்வாளர் அமைப்பு தெரிவித்துள்ளது.

ஹர்த்தால் காரணமாக மட்டக்களப்பு மாவட்டம் முழுமையாகச் செயழிலந்துள்ளது. மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. பாடசாலைகளும் இயங்கவில்லை.

கொரோனா வைரஸ் தடுப்பு முகாம்களை உடனடியாக மூடி மக்கள் நடமாட்டம் இல்லாத பிரதேசங்களுக்குக் கொண்டு செல்லுமாறு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மக்கள் நடமாட்டம் இல்லாத பெருமளவு பிரதேசங்கள் தென் பகுதியில் இருக்கும் போது மக்கள் நெருக்கமாக வாழும் மட்டக்களப்பு மாட்டத்தில் எதற்காக கொரோனா வைரஸ் தடுப்பு முகாம் அமைக்க வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

நேற்றுப் புதன்கிழமையும் போராட்டம் இடம்பெற்றிருந்தது.