இலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கம்

கலைக்கப்பட்ட நாடாளுமன்றத்தை மீண்டும் கூட்டுமாறு சஜித் கோரிக்கை

சந்தேகத்துக்குரிய பயணிகளை மட்டக்களப்பில் தடுத்து வைப்பதற்கு மக்கள் தொடர்ந்தும் எதிர்ப்பு
பதிப்பு: 2020 மார்ச் 13 22:59
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: மார்ச் 14 00:18
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lka
#sajithpremadasa
கலைக்கப்பட்ட நாடாளுமன்றத்தை மீண்டும் உடனடியாகக் கூட்டுமாறு ஐக்கிய மக்கள் சக்தி அரசியல் அணியின் தலைவர் சஜித் பிரேமதாச ஜனாதிபதி கேட்டாபய ராஜபக்சவிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இலங்கைக்கு வருகை தந்த வெளிநாட்டுப் பயணிகளினால் கொரோனா வைரஸ் பரவுவதையடுத்து பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள், தனியார் கல்வி உயர் கல்வி நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. எனவே பாதுகாப்பு ஏற்பாடுகள், மக்களுக்கு ஏற்படக் கூடிய அசொளகரியங்கள் குறித்துப் பேசவும் உரிய நடவடிக்கைகளைக் கூட்டாக மேற்கொள்ளும் வகையிலும் கலைக்கப்பட்ட நாடாளுமன்றத்தை மீண்டும் கூட்டுமாறு சஜித் பிரேமதாச கோரியுள்ளார்.
 
கலைக்கப்பட்ட நாடாளுமன்றத்தை அவசர தேவையின்போது மீண்டும் கூட்டுவதற்கு இலங்கை அரசியலமைப்பில் ஜனாதிபதிக்குரிய அதிகாரங்களில் விதப்புரைகள் இருப்பதாகவும் அதனடிப்படையில் விசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் மீண்டும் நாடாளுமன்றத்தைக் கூட்டுமாறு அவர் கோரியுள்ளார்.

கொரோனா வைரஸ் பரவும் தகவலையடுத்து இலங்கைப் பங்குச் சந்தை விழ்ச்சியடைந்துள்ளது. பொருளாதார நெருக்கடிகளும் ஏற்பட்டுள்ளன.

அத்தியாவசியப் பொருட்களுக்குத் தட்டுப்பாடுகளும் ஏற்பட்டுள்ளன. எனவே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உரிய பதில் வழங்க வேண்டும் என்று சஜித் பிரேமதாச கேட்டுள்ளார்.

அதேவேளை, கொரோனா ரைவஸ் தீவிரமாகப் பரவியுள்ள வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு வரும் பயணிகளை தாயகப் பிரதேசமான கிழக்குமாகாணம் மட்டக்களப்பு மாவட்டத்திற்குக் கொண்டு 14 நாட்கள் தடுத்து வைக்கப்படுகின்றமைக்கு மக்கள் கடும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர்.

மக்கள் நடமாட்டம் இல்லாத வேறு பிரதேசங்களில் அவர்களைத் தடுத்து வைக்குமாறு கோரி கிழக்கு மாகாண மக்கள் தொடர்ச்சியாகப் போராடி வருகின்றனர்.