கொரோனா வைரஸ் தாக்கம்- இந்தியாவுக்குச் சென்றிருந்த

சிங்கள யாத்திரிகர்கள் இரணைமடு, கொடிகாமம் நிலையங்களில் பராமரிப்பு

குளத்துக்கு அருகில் வீசப்பட்டிருந்த உணவுக் கழிவுகள்
பதிப்பு: 2020 மார்ச் 22 21:41
புதுப்பிப்பு: மார்ச் 22 22:06
main photo main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
கொரோனா வைரஸ் தொற்று மேலும் பரவி வருவதையடுத்து இலங்கையில் இருந்து இந்தியாவுக்குச் சென்றிருந்த சிங்கள யாத்திரிகர்கள் அழைத்து வரப்பட்டு தமிழர் தாயகமான வடமாகாணம் யாழ்ப்பாணத்தில் உள்ள கொடிகாமம் பிரதேசத்திலும் கிளிநொச்சி இரணைமடுப் பிரதேசத்திலும் 14 நாட்களுக்குத் தங்கவைக்கப்பட்டுப் பராமரிக்கப்படுகின்றனர். இந்தப் பிரதேசங்களில் உள்ள இலங்கை விமானப் படையினரின் முகாம்களில் தனிமைப்படுத்தும் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. கொழும்பு கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையத்தில் இருந்து அழைத்து வரப்பட்ட தென்நூற்றுக்கும் அதிகமான யாத்திரிகர்கள் இங்கு தனிமைப்படுத்தப்பட்டுப் பராமரிக்கப்படுகின்றனர்.
 
கிளிநொச்சிக்கு அழைத்து வரப்படும்போது விமான நிலையத்தில் வைத்து இவர்களுக்கு வழங்கப்பட்ட உணவுப் பொதிகளின் கழிவுகள் இரணைமடுக் குளத்தின் வீதிகளின் இருமருங்கிலும் வீசப்பட்டுள்ளன.

இந்தக் கழிவுப் பொருட்களைக் கண்ட பிரதேச மக்கள் கிளிநொச்சி மாவட்ட சுகாதாரப் பணிப்பாளர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு அறிவித்தனர். சம்பவ இடங்களைப் பார்வையிட்ட சுகாதாரப் பணிப்பாளர், உடனடியாக குறித்த கழிவுகளை அகற்றுமாறு உத்தரவிட்டார்.

பொறுப்பற்ற முறையில் குளத்துக்கு அருகில் கழிவுப் பொருட்கள் விசப்பட்மை தொடர்பாக குறித்த விமானப் படை முகாம் பொறுப்பதிகாரிக்கும் முறையிடப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றியிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படும் மக்களைத் தனிமைப்படுத்தும் நிலையங்களை வடக்குக் கிழக்குத் தாயகப் பகுதிகளில் அமைக்க வேண்டாமென எடுத்துக் கூறப்பட்ட போதும், இலங்கை இராணுவ முகாம்களிலும் அதற்கு அருகில் உள்ள பொதுக் கட்டடங்களிலும் தனமைப்படுத்தும் நிலையங்கள் அமைக்கப்டுகின்றன.

தென்பகுதியான அம்பாந்தோட்டை, காலி, மாத்தறை, மற்றும் வடமத்திய மாகாணத்தில் அனுராதபுரம், பெலன்னறுவை ஆகிய மாவட்டங்களில் மக்கள் நெருக்கமாக வாழாத பிரதேசங்கள் இருப்பதாகவும், அங்கு தனிமைப்படுத்தல் முகாம்களை அமைக்குமாறும் பொது அமைப்புகள் ஏற்கனவே கேட்டிருந்தன.

ஆனால் இதுவரையும் தமிழரசுக் கட்சியை மையப்படுத்திய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் எவரும் இவ்வாறு கோரிக்கை விடுக்கவில்லையென மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர். முல்லைத்தீவு, வவுனி்யா, மன்னார், கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களில் தனிமைப்படுத்தல் நிலையங்கள் இலங்கை விமானப்படையினரின் ஒத்துழைப்புடன் அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.