இலங்கை அரசாங்கத்தின் உதவிகள் போதியதாகக் கிடைக்காத நிலையிலும்

வடக்குக்- கிழக்குப் பகுதிகளில் சுத்தம் செய்யும் பணிகள் ஆரம்பம்

கொரோனா வைரஸ் தொற்றுவதைத் தடுக்கும் விழிப்புணர்வு ஏற்பாடுகள்
பதிப்பு: 2020 மார்ச் 23 23:14
புலம்: யாழ்ப்பாணம், ஈழம்
புதுப்பிப்பு: மார்ச் 26 17:39
main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lka
#tamil
இலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வருவதையடுத்து வடக்குக்- கிழக்குத் தாயகப் பகுதிகளில் சுகாதாரப் பணியாளர்கள் பிரதேசங்களைச் சுத்தம் செய்யும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இலங்கை அரசாங்கம் போதிய வசதிகளைச் செய்வதற்கு உரிய நடவடிக்கை எடுக்கத் தவறியதால் குறைந்த பட்சம் பிரதேசத்தில் உள்ள வளங்களைக் கொண்டும் சொந்த முயற்சியினாலும் துப்பரவுப் பணிகள் ஆரமப்பிக்கப்பட்டுள்ளன. திட்டமிடப்பட்ட முறையில் யாழ்ப்பாணம், கொடிகாமம், கிளிநொச்சி இரணைமடுக்குள்ம், மட்டக்களப்பு, வவுனியா, மன்னார், ஆகிய தாயகப் பி்ரதேசங்களில் இலங்கை அரசாங்கம் கொரேனா தனிமைப்படுத்தல் நிலையங்களை அமைத்து வெருகின்றது.
 
இந்த நிலையில் மேலும் தொற்றுகள் ஏற்படாமல் இருக்கும் நோக்கில் பொது மக்களுக்கு விழிப்புணர்வுகளும் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. அதேவேளை, யாழ்ப்பாணம் நகரப் பகுதியை சுத்தமாக்கும் பணி யாழ். மாநகர சபையின் சுகாதார ஊழியர்களினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இலங்கை அரசாங்கத்தின் ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ள நிலையில் யாழ்ப்பாண மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் கழிவகற்றும் செயற்பாடுகளை மேற்கொள்வதில் சிரமங்கள் ஏற்பட்டிருந்தன.

ஆனாலும் சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் மாநாகர சபையின் சுகாதார ஊழியர்கள் ஆகியேர் பெரும் சிரமங்களுக்கு மத்தியில் யாழ் மாநகர சபைக்கு உட்பட்ட பகுதிகளை சுத்தம் செய்து வருவதாக யாழ்ப்பாண மாநகரசபை ஆணையாளர் ஜெயசீலன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாநாகர சபை, மன்னார் நகர சபை, வவுனியா நகர சபை ஆகியனவும் தத்தமது பிரதேசங்களைச் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றன. மாவட்ட அரசாங்க அதிபர்களும் சுத்தம் செய்யும் பணிக்கு ஒத்துழைப்பு வழங்குவதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.