கொரோனா வைரஸ் தொற்று

இலங்கையில் இறந்தவர்களின் எண்ணிக்கை நான்காக அதிகரிப்பு

வடக்குக் கிழக்கில் இளைஞர், யுவதிகள் உதவி- தொற்று நீக்கும் பணிகள் முன்னெடுப்பு
பதிப்பு: 2020 ஏப். 02 23:23
புலம்: யாழ்ப்பாணம், ஈழம்
புதுப்பிப்பு: ஏப். 02 23:39
main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lka
#tamil
#coronavirus
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் இன்று வியாழக்கிழமை மேலும் இருவர் உயிரிழந்துள்ளனர். இதனால் இறந்தவர்களின் எண்ணிக்கை நான்காக அதிகரித்துள்ளது. தொற்றினால் பாதிக்கப்பட்டு 151 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 21 பேர் சிகிச்சையில் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 251 பேர் தொற்றிருப்பதாகச் சந்தேசிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். கேகாலை பின்னவலைப் பிரதேசத்தில் 51 குடும்பங்கள் நேற்றுப் புதன்கிழமை முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். வைரஸ் தொற்றியவர்களின் எண்ணிக்கை மேலம் அதிகரிக்கலாம் என்று இலங்கை மருத்துவர் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
 
பரிசோதனைக் கருவிகள் இலங்கையில் போதியதாக இல்லை என்பதால் சந்தேகத்துக்குரியவர்கள் பலரின் ரத்த மாத்திரிகள் இன்னமும் பரிசோதிக்கவில்லை என்றும் அந்தப் பிரிசோதனை முடிவுகளும் வெளியான பின்னர் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்றும் அவர்கள் பழகிய நபர்களும் வைரஸ் தொற்றியுள்ள சந்தேகத்தில் வைத்தியசாலைக்கு வரக் கூடும் எனவும் வேறு சிலர் வராமலேயே ஒழிந்துவிடும் சந்தர்ப்பங்களும் இருப்பதாகவும் இது மேலும் ஆபத்தான ஒரு நிலைமை இலங்கையில் உருவாக்குமென்றும் வைத்தியர் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அதேவேளை, இன்று வியாழக்கிழமை மேலும் ஐந்து பேருக்குப் புதிதாக கொரோனா தொற்று அடையாளம் காணப்பட்டுள்ளதாக இலங்கைச் சுகாதார அமைச்சு கூறியுள்ளது.

இதேவேளை, இந்த வைரஸ் தொற்றினால் தொடர்ச்சியாக அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டம் காரணமாக வடக்குக்- கிழக்குத் தமிழ் மக்கள் கூடுதலாககப் பாதிக்கப்பட்டுள்ளனர். தொற்று ஏற்படும் என்ற சந்தேகம் ஒரு புறமிருக்க மறுபுறத்தில் அன்றாடம் உழைத்து வாழ்வோர், சுயதொழிலில் ஈடுபடுவோர் பெரும் சிரமங்களை எதிர்நோக்கியிருப்பதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.

இலங்கை அரசாங்கத்தின் உதவிகள் போதியதாக இல்லையென்று மாவட்ட அரசாங்க அதிபர்கள் கூறியுயுள்ள நிலையில் அங்குள்ள தமிழ் இளைஞர் யுவதிகள் தங்களால் முடி்ந்தளவு நிவாரணங்களை வழங்கி வருகின்றனர். சில பிரமுகர்களும் புலம் பெயர் தமிழர்களும் உதவிகள் செய்வதாக மக்கள் கூறுகின்றனர்.