கொரோனா வைரஸ் தாக்கம்

இலங்கைக்கு 128.6 மில்லியன் டெரலர்களை வழங்க உலக வங்கி ஒப்புதல்

கொழும்பில் நிதியமைச்சு தகவல்
பதிப்பு: 2020 ஏப். 03 23:06
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: ஏப். 03 23:25
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lka
#coronavirus
இலங்கையின் அபிவிருத்திச் செயற்பாடுகளுக்காக சீன அபிவிருத்தி வங்கி ஐநூறு மில்லியன் அமெரிக்க டெலர்களை வழங்குவதற்கான ஒப்பந்தத்தில் கடந்த வாரம் கைச்சாத்திட்டிருந்த நிலையில், கொரோனா வைரஸ் தாக்ககத்துக்கு எதிரான தடுப்புப் பணிகளுக்காக இலங்கைக்கு 128.6 மில்லியன் அமெரிக்க டொலர்களை உலக வங்கி வழங்க ஒ்ப்புதல் வழங்கியுள்ளது. இந்தத் தகவலை கொழும்பில் உள்ள இலங்கை அரசாங்கத்தின் நிதியமைச்சு கூறியுள்ளது. ஆரம்ப அவசரச் செயற்பாடுகளுக்காக 1.9 பில்லியன் டொலர் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவ்வாறான ஆரம்ப கட்ட அவசர உதவிகள் கொரோனா வைரஸ் தாக்கத்துக்குள்ளான வளரும் நாடுகளுக்கு வழங்கப்படுமென்றும் உலக வங்கி அறிவித்துள்ளதாக இலங்கை நிதியமைச்சின் தகவல்கள் கூறுகின்றன.
 
அதேவேளை, உலக வங்கியின் இவ்வாறான அவசர நிதி உதவியின் மிகப்பெரிய நிதியுதவி இந்தியாவின் நரேந்திரமோடி அரசாங்கத்துக்கு வழங்கப்படவுள்ளது. சுமார் ஒரு பில்லியன் அமெரிக்க டொலர், கொரோனா வைரஸ் தாக்கத்துக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் இந்தியாவிற்கு வழங்க இணக்கம் ஏற்பட்டுள்ளது.

தெற்காசியா நாடுகளில் பாகிஸ்தானுக்கு 200 மில்லியன் அமெரிக்க டொலர்களும், ஆப்கானிஸ்தானுக்கு 100 மில்லியன் அமெரிக்க டொலர்களும், மாலைத்தீவுக்கு 7.3 மில்லியன் அமெரிக்க டொலர்களும், இலங்கைக்கு 128.6 மில்லியன் அமெரிக்க டொலர்களும் வழங்க ஒப்புதல் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாக உலக வங்கி கூறுகின்றது.