கொரோனோ வைரஸ்

இலங்கையில் 12 பிரதேசங்கள் முடக்கம்- எவரும் வெளியில் செல்ல முடியாது

யாழ்ப்பாணத்தில் அாியாலை, தாவடிப் பிரதேசங்கள் தொடர்ந்து தனிமைப்படுத்தலில்
பதிப்பு: 2020 ஏப். 04 23:50
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: ஏப். 06 21:35
main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lka
#coronavirus
கொரானா வைரஸ் வேகமாகப் பரவி வரும் நிலையில். இலங்கையில் இதுவரை பண்ணிரன்டு பிரதேசங்கள் முடக்கப்பட்டுள்ளன. வடமாகாணம் யாழ்ப்பாணத்தில். அரியாலை, தாவடி பிரதேசம் கடந்த இரு வாரங்களுக்கு முன்னரே தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. கொழும்பின் குநகர் பகுதியான களுத்துறை மாவட்டத்தின் அட்டுலுகம, பேருவளையின் சில பகுதிகள் கண்டி மாவட்டத்தின் அக்குரணை, புத்தளம் மாவட்டத்தின் கடையன் குளம் மற்றும் நாத்தாண்டியின் ஒரு பகுதி, கம்பஹா மாவட்டத்தின் கொச்சிக்கடை போரத்தொட்டை ஆகிய பகுதிகளும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. இங்கு கொரோனா தொற்றாளர்கள் கண்டுபிடிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வரும் நிலையில் அவர்கள் வாழ்ந்த இந்தப் பிரதேசங்கள் பாதுகாப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.
 
அதேவேளை, கொழும்பு மாவட்டத்தின் கிராண்ட்பாஸ் பகுதியில் உள்ள டி வாஸ் லேன், மருதானை பொலிஸ் பிரிவின் இமாமுல் அரூஸ் மாவத்தை, ரத்மலானை அர் ஜனமாவத்தை, குருணாகல் மாவட்டத்தின் கட்டுபொத்தை, கெக்குனுகொல்ல பிரதேசத்தின் ஒரு பகுதி, மத்தறை மாவட்டத்தின் அக்குரஸ்ஸ, அக்குரஸ்ஸ மாலிதுவ கொஹூகொட பகுதிகளும் முற்றாக முடக்கப்பட்டுள்ளன.

குருணாகல் மாவட்டத்தின் - கட்டுபொத்தை கெக்குனுகொல்ல பிரதேசத்தின் ஒரு பகுதியில் ஊரடங்குச் சட்;டம் தளர்த்தப்பட்டாலும் எவரும் உள்ளே செல்லவோ வெளியோ செல்லவோ அனுமதிக்கப்படவில்லை.

இதேவேளை, யாழ்ப்பாணம் அரியாலையில் சுவிஸ் போதகர் நடத்திய ஆராதனை நிகழ்வில் கலந்துகொண் பலருக்குக் கொரோனா தொற்று இரு;ப்பதாக வடமாகாண சுகாதாரத் திணைக்கள அதிகாரிகள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.