இலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கம்-

கொழும்பில் இத்தாலியைப் போன்றதொரு மரண அவலம் உருவாகலாம்- மருத்துவர் சங்கம் எச்சரிக்கை

இலங்கைப் பொலிஸாரின் செயற்பாடுகள் மீதும் குற்றச்சாட்டு
பதிப்பு: 2020 ஏப். 23 23:12
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: ஏப். 23 23:39
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lka
#coronavirus
கொரேனா வைரஸ் தாக்கத்தினால் இத்தாலியில் ஏற்பட்ட பெரும் மரண அவலங்களைப் போன்றதொரு நிலமை இலங்கையின் தலைநகர் கொழும்பில் உருவாகக் கூடிய ஆபத்துள்ளதாக இலங்கை மருத்துவர் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஊரடங்குச் சட்டம் அமுலில் இருந்தபோது தேவையற்ற முறையில் வியாபரிகளுக்கு வழங்கிய சிறப்பு அனுமதி முறையினாலேயே கொரேனா வைரஸ் பரவியதாகவும் இது சமூகப் பரவலாக உருவாகக் கூடிய ஆபத்துள்ளதாகவும் மருத்துவர் சங்கம் கூறியுள்ளது. வெளிநாட்டில் இருந்த வந்த ஒருவர் பேலியகொட மீன் சந்தையில் மீன் கொள்வனவு செய்திருக்கிறார். அந்த மீன் வியாபாரிக்கும் அந்த வெளிநாட்டவருக்கும் தற்போது கொரோனா வைரஸ் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
 
இதனால் பொலிஸாரின் அனுமதியோடு அங்கு மீன்களைக் கொள்வனவு செய்ய வந்தவர்களையும் அங்கு மீன்களைக் கொள்வனவு செய்து கொண்டு கொழும்பில் வேறு பிரதேசங்களுக்கு அந்த மீன்களை விற்பனை செய்யச் சென்ற வியாபாரிகளையும் கண்டறிய முடியாதுள்ளது. அத்துடன் மீன்களைக் கொண்டு எந்தெந்த இடங்களில் விற்பனை செய்தார்கள் என்பதையும் கண்டறிய முடியவில்லை.

இதேவேளை, ஊரடங்குச் சட்டத்தை பொலிஸார் உரிய முறையில் அமுல்படுத்தவில்லை என்பது தொடர்பாக சுகாதார அமைச்சும் சரியான நடவடிக்கை எடுக்கத் தவறியதாதகவும் மருத்துவர் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.

ரும் ஆபத்தான நிலமை கொழும்பில் உருவாகியுள்ளதாகவும் கூறப்படுகின்றது. இதேவேளை, கொழும்பின் புநகர் பகுதியான வெலிசறை கடற்படைத் தளத்தில் 29 கடற்படைச் சிப்பாய்களுக்கு கொரேனா வைரஸ் தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் அந்தக் கடற்படைத் தளமும் அதனைச் சுற்றியுள்ள பிரதேசங்களும் இன்று வியாழக்கிழமை இரவு முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

இன்று இரவு வரை 368 பேருக்கு தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.