கொரோனா வைரஸ் தாக்கம்-

இலங்கைக் கடற்படையினர் 30 பேருக்குக் கொரோனா வைரஸ்

வெலிசறைக் கடற்படை முகாமைச் சுற்றியுள்ள பிரதேசங்கள் தனிமைப்படுத்தப்பட்டன
பதிப்பு: 2020 ஏப். 23 23:35
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: ஏப். 24 00:17
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lka
#navy
#coronavirus
கொழும்பின் புநகர் பகுதியான வெலிசறையில் உள்ள இலங்கைக் கடற்படைத் தளத்தில் 30 கடற்படைச் சிப்பாய்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஜாஎல சுதுவெல்ல பகுதியில் அடையாளம் காணப்பட்ட போதைப் பொருட்களுடன் தொடர்புடைய கொரோனா வைரஸ் தொற்றியவர்களைத் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்துவதற்காக கடமையில் ஈடபட்டிருந்தபோதே கடற்படையினருக்குத் தொற்று ஏற்பட்டதாகத் தெரியவந்துள்ளதென, தமிழினப் படுகொலைக் குற்றச்சாட்டுக்கு உள்ளான இலங்கை இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். முகாமில் இருந்த அனைத்துக் கடற்படையினருக்கும் ரத்தப் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும், அதில் 30 கடற்படைச் சிப்பாய்களுக்கு வரைஸ் தொற்றியுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதென்றும் அவர் கூறினார்.
 
கடற்படை சிப்பாய் ஒருவர் நேற்றுப் புதன்கிழமை விடுமுறையில் சென்றிருந்தவேளை, திடீரென ஏற்பட்ட சுகவினம் காரணமாக அவர் வெலிகந்த வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். அதன் பின்னர் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனை மூலம் அவருக்குக் கொரோனா வைரஸ் பரவியிருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதனையடுத்தே முகாமில் இருந்த படையினர், பணியாளர்கள் அனைவருக்கும் ரத்தப் பரிசோதனை செய்ததாகவும் அவர் கூறினார். இன்று வியாழக்கிழமை மாலை முதல் வெலிசறைப் பிரதேசம் முழுமையாகத் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.