வெளிவராத தகவல்

இலங்கைப் படையினர் பலருக்குக் கொரோனா வைரஸ் தொற்று எவ்வாறு ஏற்பட்டது?

கொழும்பில் பல்வேறு சந்தேகங்கள்
பதிப்பு: 2020 ஏப். 27 20:43
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: ஏப். 28 21:06
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lka
#slnavy
#coronavirus
இலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்லும் நிலையில் இலங்கைப் படையினர் மத்தியில் இந்த வைரஸ் எவ்வாறு பரவியது என்பது தொடர்பாக கொழும்பில் பல்வேறு சந்தேகங்கள் நிலவுகின்றன. கொரோனா தொற்றியுள்ளது என்ற சந்தேகத்தில் உள்ளவர்களைத் தேடிச் சென்ற இடங்களில் இருந்தே படையினருக்குத் தொற்று ஏற்பட்டிருப்பதாக இலங்கை இராணுவம் கூறுகின்றது. ஆனாலும் விடுமுறையில் சென்ற படையினருக்கு அதுவும் கடற்படையினருக்கு எவ்வாறு தொற்றியது என்பது தொடர்பாக பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன. கட்டுநாய்க்கா விமானப்படை முகாமில் உள்ள சிப்பாய் ஒருவருக்கும் கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது.
 
இலங்கை இராணுவத்தினர் 180 பேருக்கு இதுவரை கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. தனிமைப்படுத்தப்பட்டுள்ள சுமார் நான்காயிரம் படையினரில் பலருக்கு தொற்று இருக்கலாமெனவும் சந்தேகிக்கப்படுகின்றது.

சென்ற மார்ச் மாதம் முதல் வாரத்தில் இருந்து விடுமறையில் சென்றிருந்த அனைத்துப் படையினரும் உடனடியாக அழைக்கப்பட்டுத் தனிமைப்படுத்தல் நிலையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இவர்களை அழைத்து வருவதற்கு வசதியாகவே இன்று திங்கட்கிழமை இலங்கைத் தீவு முழுவதிலும் ஊரடங்குச் சட்டத் அமுல்படுத்தப்பட்டிருந்தது.

கொழும்பு மற்றும் புறகர் பகுதிகளில் உள்ள பல கல்லூரிகள் படையினரைத் தங்க வைப்பதற்கான தனிமைப்படுத்தல் நிலையங்களாக மாற்றப்பட்டுள்ளன. வடமாகாணத்திலும் பல பாடசாலைகள் தனிமைப்படுத்தல் நிலையங்களாக மாற்றப்பட்டு வருகின்றன.

அதேவேளை, வைரைஸ் தொற்றியவர்களை தேடிக் கண்டுபிடிக்கும் பணியில் கடற்படையினரோ விமானப்படையினரோ ஈடுபடவில்லை. பொலிஸாரும் இராணுவத்தினரும் மாத்திரமே தேடுதல் பணியில் ஈடுபட்டிருந்ததாகக் கூறப்படுகின்றது.

இந்த நிலையில் கடற்படையினருக்கும் விமானப் படையினருக்கும் எவ்வாறு தொற்று அதிகரித்து என்பது தொடர்பாக கொழும்பில் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். ஆனாலும் ஒழித்திருந்த கொரோனா வைரஸ் தொற்றாளர்களை கடற்டையினரும் தேடிக் கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபட்டதாக கடற்படைத் தளபதி கூறுகின்றார்.

எனினும் அம்பாந்தோட்டைத் துறைமகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் வாரம் சீனக் கடற்படையினர் பங்குபற்றிய கூட்டுப் பயிற்சி ஒன்றில் இலங்கைக் கடற்படை, மற்றும் இலங்கை விமானப்படையின் வாத்திய இசைப் பிரிவும் பங்குபற்றியதாகவும் இதனாலேயே அவர்களுக்குத் தொற்று ஏற்பட்டிருக்கலாமென்றும் உள்ளகத் தகவல் ஒன்று கூறுகின்றது.

எனினும் எந்தவொரு தகவலையும் இலங்கை முப்படைகளின் அலுவலகம் உறுதியாகக் கூறவில்லை.