கொரோனர வைரஸ் தாக்கம்

கட்டுப்பாடுகளோடு அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் இயங்கும்

கொழும்பில் மாத்திரம் திங்கட்கிழமை ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்படாது
பதிப்பு: 2020 மே 08 23:31
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: மே 09 00:07
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lka
#coronavirus
தற்போது அமுலில் உள்ள ஊரடங்குச் சட்டம் எதிர்வரும் 11 ஆம் திகதி திங்கட்கிழமை தளர்த்தப்படாதென இலங்கை அரசாங்கத்தின் சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னி ஆராச்சி கூறியுள்ளார். ஆனால் அரச மற்றும் தனியார் அலுவலகங்கள் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் குறிப்பிட்ட சில மணிரேநம் செயற்படும் என்றும் அவர் கூறியுள்ளார். கொரோனா வைரஸ் தாக்கம் மேலும் அதிகரித்துச் செல்லும் நிலையில், இன்னும் சில வாரங்கள் முடக்க நிலையைத் தொடார வேண்டுமென இலங்கை மருத்துவர் சங்கம் அரசாங்கத்துக்கு ஆலோசனை வழங்கியுள்ளது. இதனடிப்படையிலேயே திங்கட்கிழமை ஊரடங்குச் சட்டத்தைத் தளத்த்த முடியாதென அறிவிக்கப்பட்டுள்ளது.
 
அதேவேளை, ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ளபோது தேவையற்ற முறையில் வெளியே செல்பவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்றும் இரண்டு ஆண்டுகள் சிறையில் அடைக்கப்படுவார்களெனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோகன தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் திங்கட்கிழமை முதல் இது நடைமுறைக்கு வரும் என்றும் தேசிய அடையாள அட்டையின் இறுதி இலக்கத்தின் படி குறிப்பிட்ட கிழமைகளில் உரியவர்கள் அத்தியாவசியத் தேவைகளுக்காக வெளியே சென்று வர முடியும் என்றும் அவர் கூறியுள்ளார்.

வடக்குக் கிழக்கு உள்ளிட்ட ஏனைய மாகாணங்களில் தினமும் காலை ஐந்து மணிக்கு ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டு மாலை ஆறு மணிக்கு மீண்டும் பிறப்பிக்கப்படும் எனவும் இந்த நடைமுறை எதிர்வரும் 11 ஆம் திகதி திங்கட்கிழமை முதல் அமுலுக்கு வரும் என்றும் இலங்கை அரசாங்கம் கூறியுள்ளது.

ஆனால் கொழும்பு, களுத்துறை. கம்பகா ஆகிய மாவட்டங்களில் தொடர்ந்து ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்குமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.