இலங்கைச் சுயாதீன ஆணைக்குழுவின் தீர்மானம்

யூன் மாதம் நாடாளுமன்றத் தேர்தலை நடத்த முடியாது- உயர் நீதிமன்றத்திற்கு அறிவிப்பு

சுகாதாரத் திணைக்களத்தின் உறுதிப்படுத்தல் கடிதம் கோரப்படுகிறது-
பதிப்பு: 2020 மே 20 23:09
புதுப்பிப்பு: செப். 25 17:23
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
எதிர்வரும் யூன் மாதம் 20 ஆம் திகதி நாடாளுமன்றத் தேர்தலை நடத்த முடியாதென இலங்கைச் சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழு இன்று புதன்கிழமை உயர் நீதிமன்றத்திறகு; அறிவித்துள்ளது. ஜூன் மாதம் 20 ஆம் திகதி தேர்தலை நடத்துவது தொடர்பாக அறிவிக்கப்பட்டிருந்த அரச வர்த்தமானிக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட எட்டு அடிப்படை உரிமை மனுக்கள் மீதான விசாரணை உயர்நீதிமன்றில் இன்று மூன்று நாள்களாகவும் இடம்பெற்று வரும் நிலையில் தேர்தலை நடத்தக் கூடிய சுகாதாரச் சூழல் இல்லையென தேர்ல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. தேர்தல்கள் ஆணைக்குழு சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் நீதிமன்ற நீதியரசர்களிடம் இந்த அறிவித்தலைக் கைளளித்தார்.
 
அதேவேளை, குறித்த எட்டு மனுக்கள் தொடர்பான விசாரணை நாளை வியாழக்கிழமை நான்காவது நாளாகவும் நடைபெறவுள்ளது.

கொரோனா வைரஸ் தாக்கம் இல்லை என்பதை உறுதிப்படுத்திச் சுகாதாரத் திணைக்களம் அல்லது இலங்கை மருத்துவர் சங்கம் கடிதம் வழங்கினால் மாத்திரமே தேர்தலை நடத்துவது தொடர்பான அறிவித்தலை வெளியிட முடியுமென தேர்தல்கள் ஆணைக்குழு சார்பாக முன்னிலையான சட்டத்தரணி சாலிய பீரிஸ் நீதிமன்றத்தில் தொவித்தார்.

அதேவேளை, கலைக்கப்பட்ட நாடாளுமன்றத்தின் பதவிக்காலம் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் வரை உள்ளதால் மீண்டும் அந்த நாடாளுமன்றம் கூட்டப்படலாமென உள்ளகத் தகவல்கள் கூறுகின்றன.