தமிழ் பேசும் மக்களின் தாயகம்-

கிழக்கு மாகாணத்தில் தொல்பொருள் ஆய்வுகளை மேற்கொள்ள இராணுவ அதிகாரி தலைமையில் செயலணி

இலங்கை ஒற்றையாட்சி அரசின் மற்றுமொரு இன அழிப்பு நடவடிக்கையெனக் குற்றச்சாட்டு
பதிப்பு: 2020 மே 23 23:06
புலம்: மட்டக்களப்பு, ஈழம்
புதுப்பிப்பு: மே 24 23:39
main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lka
#tamil
#genocide
கிழக்கு மாகாணத்தில் தொல்லியல் ஆய்வு என்ற போர்வையில் தமிழ் பேசும் மக்களின் தாயகப் பிரதேசங்களை அபகரிக்கும் நோக்கில் இலங்கைப் பாதுகாப்பு படைகளின் பிரதானி மேஜர் ஜெனரல் கமால் குணரட்ன தலைமையில். விசேட செயலணி ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. கிழக்கு மாகாணத்தில் ஏலவே சிங்களக் குடியேற்றங்கள் செய்யப்பட்டு பௌத்த விகாரைகளும் கட்டுப்பட்டுள்ள நிலையில் இந்த விசேட செயலணி குறித்து சந்தேகம் எழுந்துள்ளதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மட்டக்களப்பு இணை;ப்பாளர் தா்மலிங்கம் சுரேஸ். தமிழ்த தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அரியநேந்திரன் மற்றும் கிழக்கு மாகாணத்தில் உள்ள பொது அமைப்புகள் குற்றம் சுமத்தியுள்ளன.
 
இந்தச் செயலணியி்ல் பௌத்த பிக்குமாரும் உள்ளடங்கியுள்ளனர். இது தொடர்பாக பௌத்த பிக்குமார் அடங்கிய ஆலோசனைக் குழு வழங்கிய பரிந்துரைக்கு அமைவாகவே இந்தச் செயலணி உருவாக்கப்பட்டுள்ளது.

திருகோணமலை கன்னியாய் வெந்நீருற்றுப் பிரதேசத்தில் புத்த தாதுக் கோபுரம் ஒன்றைக் கட்ட முற்பட்டபோது சர்ச்சை ஏற்பட்டிருந்தது. அப்போது அமைச்சராக இருந்த மனோ கணேசன் அந்த விவகாரத்தில் தலையிட்டிருந்தார்.

இலங்கைத் தொல்nhபாருள் திணைக்களத்தில் தொல்லியல் ஆய்வுகளை மேற்கொள்ளும்போது சிங்கள தொல்லியல் பேராசிரியர்கள் மாத்திரம் அல்லாது தமிழ் தொல்லியல் பேராசிரியர்கள் மற்றும் துறைசார்ந்தவர்கள் இணைத்துக் கொள்ளப்பட வேண்டுமென இணக்கம் ஏற்பட்டிருந்தது.

ஆனால் அந்த இணக்கம் பொய்யானது என்பதை நவம்பர் மாதம் 19 ஆம் திகதி ஜனாதிபதியாகப் பதவியேற்ற கோட்டாபய ராஜபக்சவின் செயற்பாடுகள் காண்பிக்கின்றன. வடக்குக் கிழக்கு மாகாணத்தில் இராணுவ அதிகாரிகளின் தலையீடுகளுக்கு முக்கியம் கொடுக்கப்பட்டு வருவதாகத் தமிழரசுக் கட்சி கூட குற்றம் சுமத்தி வருகின்றது.

ஆகவே நாடாளுமன்றதில் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் இந்தச் செயலணி நியமிக்கப்பட்டமை வடக்குக்- கிழக்கு மாகாண மக்கள் மத்தியில் பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆனாலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இது தொடர்பாகக் கண்டனம் தெரிவிக்கவில்லை.

ஆனாலும் அங்குள்ள பொது அமைப்புகள், இது இலங்கை ஒற்றையாட்சி அரசின் மற்றுமொரு இன அழிப்பு நடவடிக்கையெனக் குற்றம் சுமத்தியுள்ளன.