மலையகத் தமிழர்களின் நம்பிக்கைகுரியவராக இருந்த செளாமிய மூர்த்தி தொண்டமானின் பேரன்

ஆறுமுகன் தொண்டமான் கொழும்பில் காலமானார்

இலங்கை நாடாளுமன்றச் சபா மண்டபத்தில் பூதவுடல் அஞ்சலிக்காக வைக்கப்படும்
பதிப்பு: 2020 மே 26 23:03
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: மே 26 23:19
main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lka
#cwc
இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் தலைவரும் மகிந்த ராஜபக்ச, கோட்டபாய ராஜபக்ச ஆகியோரை மையப்படுத்திய ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனக் கட்சி அரசாங்கத்தின் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான் இன்று செவ்வாய்க்கிழமை இரவு காலமாகிவிட்டார். கொழும்பின் புநகர் பகுதியான தலங்கம பிரதேசத்தில் உள்ள அமைச்சருக்குரிய உத்தியோகபூர்வ இல்லத்தில் மயங்கி விழுந்த நிலையில் தலங்கம பிரதேச வைத்தியசாலையில் அவரது மெய்ப்பாதுகாவலர்கள் அனுமதித்தனர். ஆனாலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாக அவரது அமைச்சின் செயலாளர் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
 
மாரடைப்பே காரணம் எனவும் அவர் கூறினார். 1999 ஆம் ஆண்டு சௌமிய மூர்த்தி தொண்டமான காலமானதையடுத்து அவருடைய பேரனான ஆறுமுகன் தொண்டமான காங்கிரஸின் தலைமைப் பொறுப்பை ஏற்றார்.

2000 ஆம் ஆண்டு சந்திரிகாவின் பொதுஜன ஐக்கிய முன்னணி அரசாங்கத்தில் முதன் முதலலாக அமைச்சராகப் பதவியேற்ற ஆறுமுகன் தொண்டமான், 2015 ஆண்டு ஜனவரி மாதம் வரை அமைச்சராகப் பதவி வகித்திருந்தார்.

மைத்திரி- ரணில் அரசாங்கம் 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் எட்டாம் திகதி பதவியேற்றதும் எதிர்க்கட்சி உறுப்பினராக இருந்தார். பின்னர், 2019 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 19 ஆம் திகதி கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாகப் பதவியேற்ற பின்னர் அமைக்கப்பட்ட அரசாங்கத்தில் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சராகப் பதவி ஏற்றார்.

தொண்டமானின் பூதவுடல் நாடாளுமன்ற சப மண்டபத்தில் வைக்கப்படுமென அரசாங்கம் அறிவித்துள்ளது. இறுதிச் சடங்குகள் பற்றிய விபரங்கள் நாளை புதன்கிழமை அறிவிக்கப்படுமென அமைச்சின் செயலாளர் கூறியுள்ளார்.

1964 ஆம் ஆண்டு மே மாதம் 29 ஆம் திகதி பிறந்த அவருக்கு எதிர்வரும் 29 ஆம் திகதி 57 வயது. புpறந்தநாள் கொண்டாட்டங்களுக்கான ஏற்பாட்டை தொழிலாளர் காங்கிரஸ் உறுப்பினர்கள் தயார்படுத்திக் கொண்டிருந்த நிலையில் மூன்று நாட்களுக்கு முன்னதாகவே அவர் இன்று காலமானார்.

ஈழத் தமிழர்களின் ஆயுதப் போராட்டத்திற்கு மதிப்புக் கொடுத்திருந்த ஆறுமுகன் தொண்டமான், தமிழ்த் தலைமைகளோடு நல்லுறவையும் பேணி வந்தார்.