இலங்கை ஒற்றையாட்சி அரசின்

நாடாளுமன்றத் தேர்தல் மேலும் மூன்று மாதங்கள் ஒத்திவைக்கப்படலாம்

அமைச்சரவைக் கூட்டத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கூறியுள்ளார்
பதிப்பு: 2020 மே 29 16:22
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: மே 29 16:54
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lka
#gotabayarajapaksa
இலங்கை ஒற்றையாட்சி அரசின் நாடாளுமன்றத் தேர்தலை நடத்துவது தொடர்பான சர்ச்சை தொடர்ந்து செல்கிறது. தோ்தலை நடத்த மேலும் மூன்று மாதங்கள் வரை ஒத்திவைக்கப்படக் கூடிய நிலை காணப்படுவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச புதன்கிழமை இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் கருத்து வெளியிட்டதாகக் கூறப்படுகிறது. உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீதான விசாரணை இன்று எட்டாவது நாளகவும் நடைபெற்ற நிலையில் அந்த விசாரணை மேலும் நீடிக்கப்படலாமென அமைச்சர்கள் சிலர் சந்தேகம் வெளியிட்டிருந்த நிலையிலேயே தேர்தல் மேலும் மூன்று மாதங்கள் வரை பிற்போடப்படலாமென கோட்டாபய ராஜபக்ச கூறியதாக அறிய முடிகிறது.
 
அதேவேளை, உயர் நீதிமன்றத் தீர்ப்பு வெளியான பின்னரே தேர்தலுக்கான திகதியை அறிவிக்க முடியுமெனத் தேர்;தல் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பரிய கூறியிருந்த நிலையில் இலங்கைச் சுகாதாரத் திணைக்களம் அல்லது இலங்கை மருத்துவர் சங்கம் உறுதிப்படுத்தும் கடிதம் வழங்கப்பட வேண்டுமென வியாழக்கிழமை இடம்பெற்ற விசாரணையின்போது மீண்டும் தனது சட்டத்தரணி மூலமாக வலியுறுத்தியுள்ளார்.

உறுதிப்படுத்தல் கடிதம் தொடர்பில் தற்போதைக்குக் கூற முடியாதென சுகாதாரத் திணைக்களத்தின் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி ஏலவே கூறியிருந்தார்.

பாடாசலைகள், பல்கலைக்கழகங்களை மட்டுப்படுத்தப்படளவில் ஆரம்பிப்பது குறித்தே தற்போது ஆராய்ந்து வருவதாக அமைச்சர் பவித்திரா வன்னியாராட்சி தெரிவித்துள்ளார்.